states

img

11 வயது தலித் சிறுவனை மரத்தில் கட்டிவைத்து அடித்த கோயில் அர்ச்சகர்!

போபால், செப்.11- பிரசாதத்தைத் திருடி விட்டதாக கூறி, 11 வயது தலித் சிறுவனை, அர்ச்சகர் ஒரு வர் மரத்தில் கட்டி வைத்த அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சாகரில் உள்ள ஜெயின் சித்தாந்த மந்திர் என்ற கோயில் உள்ளது. இங்கு ராகேஷ் ஜெயின்  என்பவர் அர்ச்சகராக உள்ளார். இந்நிலையில், கடந்த வியாழனன்று இந்த ஜெயின் கோயிலில், பிரசாதத்திற்கு வைத்திருந்த பாதாம் பருப்பை சிறுவன் ஒருவன் எடுத்து விட்டதாக கூறி அர்ச்சகர் ராகேஷ் ஜெயின் புகார் கூறியுள்ளார். அத்துடன், பாதாம் பருப்பு திருடு போன தாக கூறப்படும் நேரத்தில் கோயில் அருகில்  நின்று கொண்டிருந்த 11 தலித் சிறுவனைப்  பிடித்து, அச்சிறுவன்தான் திருடி விட்டதாக கூறி, மரத்தில் கட்டிப் போட்டுள்ளார். பின்ன தனது உறவினருடன் சேர்ந்து கடு மையாகத் தாக்கியுள்ளார். தகவல் அறிந்த சிறுவனின் தந்தை அவனை மீட்டதோடு சம்பவம் குறித்து மோதிநகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அத்துடன், மரத்தில் கட்டி வைக்கப்பட்டி ருந்த தலித் சிறுவன் அழுவதையும், தன்னை விடுவிக்கும்படி கெஞ்சுவதையும் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதி விட்ட நிலையில், அது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அர்ச்சகர் ராகேஷ் ஜெயின் மீது பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு)  சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்  டுள்ளது. எனினும் ராகேஷ் ஜெயின் உட்பட யாரும் கைது செய்யப்படவில்லை.

;