states

img

மணிப்பூரில் அமைதி திரும்பாதது அதிர்ச்சி அளிக்கிறது!

மோடி அரசுக்கு சரமாரியாக கேள்வியெழுப்பி உச்சநீதிமன்றம் கண்டனம்

“மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களை போலீசார்தான் அழைத்துச் சென்று அந்த கும்பலிடம் விட்டிருக்கின்றனர். வெளியான ஒரு வீடியோவோடு சம்பவம் முடிந்துவிடவில்லை. பல சம்பவங்கள் மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளன.

புதுதில்லி, ஜூலை 31 - மணிப்பூர் கடந்த 3 மாத மாக பற்றியெரியும் நிலை யில், இன்னும் அங்கு அமைதி திரும்பாதது தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.  மணிப்பூரில் பழங்குடி பெண்கள் இருவருக்கு நேர்ந்தி ருப்பது, இதுவரையில்லாத கொடுமை; அதனை சத்தீஸ்கர், ராஜஸ்தான், மேற்குவங்கத்தில் நடப்பவைகளோடு ஒப்பிட்டு  நியாயப்படுத்த வேண்டாம் என்றும், ஒன்றிய பாஜக அர சுக்கு உச்சநீதிமன்றம் காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளது. அத்துடன், மணிப்பூரில் நடந்த கும்பல் வல்லுறவுக் குற்றங் கள் எத்தனை? அவை தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; பாதிக்கப் பட்ட பெண்களுக்கு சட்ட உதவி கள் வழங்கப்பட்டுள்ளதா? பதிவு செய்யப்பட்ட 6 ஆயிரம் எப்.ஐ. ஆர்.கள்  மீது என்ன நடவடிக்கை கள் எடுக்கப்பட்டுள்ளன; யாரெ ல்லாம் கைது செய்யப்பட்டுள்ள னர்? என்றும் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளனர். மணிப்பூர் விவகாரத்தில் விசா ரணை நடத்துவதற்காக பெண் நீதிபதிகள் குழுவை உருவாக்க  உள்ளதாகவும் அறிவித்துள்ள உச்சநீதிமன்றம், பாதிக்கப்பட்ட சமூகத்தின் நம்பிக்கையை மீட் டெடுப்பதே தங்களின் நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

வழக்கு விசாரணை

மணிப்பூரில் கடந்த மே 4 அன்று, மெய்டெய் பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், குக்கி பழங்குடி வகுப்பைச் சேர்ந்த பெண்கள் இருவரை, நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் அத்துமீறல் கொடு மை, சித்ரவதைகளை அரங் கேற்றியதுடன், கும்பல் வல்லு றவுக்கும் உள்ளாக்கினர்.  இதுதொடர்பான வீடியோ ஆதாரம் 2 மாதம் கழித்து, கடந்த ஜூலை 19 அன்று வெளியான பின்னணியில், நாடே பெரும் அதிர்ச்சியில் உறைந்தது.  சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், இந்த விவ காரத்தை ஜூலை 20 அன்று தாமாக முன்வந்து விசார ணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த வழக்கு திங்களன்று (ஜூலை 31) மீண்டும் விசார ணைக்கு வந்தது. தலைமை நீதி பதி டி.ஒய். சந்திரசூட், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு வழக்கை விசாரித்தது.

முன்னதாக, ஒன்றிய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா, பிரமாணப்பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்திருந் தார். அதில், மணிப்பூர் வன்முறை குறித்த வழக்கு விசாரணையை மாநிலத்துக்கு வெளியே மாற்ற வேண்டும் என்றும், அங்கு நடந்த கும்பல் வல்லுறவு உள்ளிட்ட வன்முறை தொடர்பான அனைத்து வழக்குகளையும் 6  மாத காலத்திற்குள் முடிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். “பெண்களுக்கு எதிரான எந்த வொரு குற்றத்தையும் ஒன்றிய அரசு பொறுத்துக் கொள்ளாது” என்று கூறியதுடன், இந்த வழக்கின் விசாரணையை, புலனாய்வுப் பிரிவிடம் (CBI) ஒப்படைக்கும் முடிவை எடுத்து ள்ளதாகவும் ஜம்பமாக தெரிவித் திருந்தார். இதேபோல கும்பல் வல்லு றவுக்கு உள்ளான பழங்குடி பெண்கள் இருவரும், தனியாக மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதில், தங்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிக்கு எதிராக நியாய மான மற்றும் பாரபட்சமற்ற விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும்; மேலும், பாதிக்கப்பட்ட தங் களின் அடையாளம் பாதுகாக்கப் பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.  பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார். அப்போது, “மேற்குவங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளி ட்ட மாநிலங்களிலும் பெண் களுக்கு எதிராக குற்றங்கள் நடை பெறுகிறது” என கூறி, சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மணிப்பூர் கொடுமையை கடந்து செல்ல முயன்றார்.

இதுவரை நடக்காதது!

ஆனால், “இம்மாதிரியான (பாலியல் வல்லுறவு) குற்றங் கள் அங்கு நடக்கிறது, இங்கு நடக் கிறது என சொல்லி மணிப்பூரில் நடைபெற்றதை நியாயப்படுத்த முடியாது” என்று கண்டித்த தலைமை நீதிபதி, “இது வரை நடைபெற்றிராத ஒன்று  மணிப்பூரில் நடந்துள்ளது. வகு ப்புவாத, மதக்கலவரங்களுக்கு மத்தியில் வன்முறை நடந்துள் ளது. இதேபோன்ற குற்றங்கள் மற்ற பகுதிகளிலும் நடக்கின் றன என்பதற்காக மணிப்பூர் போன்ற நாட்டின் ஒரு பகுதியில் நடப்பதை நீங்கள் (அரசு) மன்னிக்க முடியாது. மணிப்பூரை எப்படி எதிர்கொள்வது என்பது தான் கேள்வி. அதற்கு பதில் சொல்லுங்கள்” என்றார்.  “இந்தியாவின் அனைத்து மகள்களையும் பாதுகாக்க சொல்கிறீர்களா அல்லது யாரை யும் பாதுகாக்க வேண்டாம் என சொல்கிறீர்களா?” எனவும், அர சுத் தரப்பு வழக்கறிஞரைப் பார்த்து அதிரடியாக கேள்வி எழுப்பினார்.

காவல்துறையே துணை போனது

“விசாரணையின் மீது பாதிக்கப் பட்ட பெண்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்” என்று கபில்சிபல் சுட்டிக்காட்டினார். “முதலில், பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையிடம் தான் பாதுகாப்பு கோரி இருக்கின்றனர். ஆனால், பாதுகாப்பு அளிப்பதற்கு பதில்,  காவல்துறையே அந்த கும்ப லிடம் அழைத்து சென்றுள்ளது; வன்முறையில் ஈடுபட்ட குற்ற வாளிகளுக்கு காவல்துறை துணைபோயிருக்கிறது” என்றார். அதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட், “மணிப்பூர் பெண்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையைப் பரந்த கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். மணிப்பூர் சம்பவம் ஒரு நிர்பயா சம்பவம் போல அல்ல. இது கும்பல் வல்லுறவு. இந்த சம்பவம் நிகழ்ந்து 14  நாட்களுக்கு பின்னரே முதல் தக வல் அறிக்கை பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய இவ்வளவு தாமதம் ஆனது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “மணிப் பூரில் பாதிக்கப்பட்ட பெண்களை போலீசார்தான் அழைத்துச் சென்று அந்த கும்பலிடம் விட்டி ருக்கின்றனர். வெளியான ஒரு வீடியோவோடு சம்பவம் முடிந்து விடவில்லை. பல சம்பவங்கள் மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்துள் ளன. எனவே, மணிப்பூர் மாநி லத்தில் பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்முறைகளில் இது வரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? மணிப் பூரில் பாதிக்கப்பட்ட பெண் களுக்கு சட்ட உதவிகள் வழங்கப் பட்டு இருக்கின்றனவா?” என்று அடுக்கடுக்கான பல கேள்வி களை எழுப்பியதுடன், “மணிப் பூரில் இன்னும் பலர் பாதிக்கப் பட்டுள்ளனர்; பல பெண்கள் புகார் அளிக்கவில்லை. அவ்வாறு புகார் அளிக்கவில்லை என்றா லும் அனைத்து சம்பவங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும்” என்றார்.

அனைத்து பெண்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்

“பாதிக்கப்பட்ட இந்த இரண்டு பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் எந்த அளவுக்கு விருப்புகிறதோ அதே அளவுக்கு இதுபோல பாதிக்கப்படும் பிற பெண்களுக்கும் நீதி கிடைக்கும் வகையில் ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும். குற்றம் தொடர்பாக வழக்கு போடுதல், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தலை உறுதி செய்யும் ஒரு செயல்முறையை உருவாக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டார். மூத்த வழக்கறிஞர் கபில்  சிபல், “இதுபோன்ற எத்தனை  வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன என்பதைச் சொல்ல இப்போது அரசிடம் தரவு இல்லை. இப்போது அங்கு எந்த  மாதிரியான நிலைமை நிலவு கிறது என்பதையே இது காட்டு கிறது” என்றதுடன், மணிப்பூர் வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்படுவதற்கும், வழக்கு விசாரணையையே அசாம் உள் ளிட்ட வேறு மாநிலத்திற்கு மாற்று வதற்கும் எதிர்ப்புத் தெரி வித்தார். மேலும், மே 4 சம்ப வத்தை விசாரிக்க சுதந்திரமான ஓர் அமைப்பை உச்ச நீதிமன்றம் உருவாக்க வேண்டும் என வலி யுறுத்திய கபில் சிபல், உச்ச நீதி மன்றம், இந்த வழக்கு விசார ணையை கண்காணிக்கவேண் டும்” என கோரிக்கை விடுத்தார்.   இதற்கு பதிலளித்த சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “வழக்கு விசாரணை எங்கு நடந் தால் சரியாக இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறதோ, அந்த இடத்துக்கு வழக்கு விசா ரணையை மாற்ற அரசு தயாராக இருக்கிறது” என்றும் “இந்த வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிப்பதிலும் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை” என்றார். அதைத்தொடர்ந்து, “பாதிக்கப் பட்ட மக்களுக்கு அரசு நிர்வாகத் தின் மீது நம்பிக்கை உருவாக வேண்டும். மணிப்பூர் மாநிலத் தில் இன்னமும் அமைதி திரும்பா மல் இருப்பது அதிர்ச்சியை தரு கிறது. பாதிக்கப்பட்ட 2 பெண் களுக்கும் நாங்கள் நீதி வழங்கு வோம்” என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்தார்.