states

ம.பி. செல்லும் மோடி மணிப்பூர் செல்ல மறுப்பது ஏன்?

துரோகிகள் மற்றும் வீணாகப் போன வர்கள் மகாராஷ்டிராவில் ஆட்சி செய்து  வருகின்றனர். இந்த வகையான அரசியல் வீழ்ச்சி  அடையும். ஏனென்றால் மகாராஷ்டிரா துரோகி களால் ஆட்சி செய்யப்படும் மாநிலமாக பார்க்கப்  படுகிறது. அவர்களை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.  மத்தியப்பிரதேசத்தில் பிரதமர் மோடி பேசும்  போது, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வர்கள் 70 ஆயிரம் கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்ட தாக சொன்னார். தற்போது அந்த கட்சியை தன்னு டன் இணைத்து உள்ளார். 70 ஆயிரம் கோடி ரூபாய்  கொள்ளை அடித்தவர்களுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.

இந்த இந்துத்வா உங்களுக்கு சரியாக தோன்றுகிறதா? மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் பிரதமர்  மோடி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், கலவரம் ஏற்பட்டுள்ள மணிப்பூருக்கு அவர் செல்லவில்லை. மணிப்பூர் வன்முறை குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உங்க ளுக்கு தைரியம் இருந்தால் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை சோதனை அமைப்பு களை மணிப்பூருக்கு அனுப்புங்கள். மணிப்பூரை  எரித்துக் கொண்டிருப்பவர்கள் தானாக உங்கள் கட்சியில் இணைந்து விடுவார்கள். ஒரு நாடு, ஒரே சட்டத்தை புரிந்து கொள்ள முடி கிறது. ஆனால் நாங்கள் ஒருபோதும் பாஜக வின் ஒரு நாடு, ஒரு கட்சி என்ற திட்டத்தை ஏற்றுக்  கொள்ள மாட்டோம். பாஜக தற்போது குப்பைக் கட்சியாகி விட்டது. பிரதமர் மோடியின் செல் வாக்கு மங்கி விட்டதை, அண்மையில் நடந்த  கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன. அங்கு அவர் ‘பஜ்ரங்பலி கி ஜெய்’ என சத்தமாக முழங்கினார். ஆனால்  கடவுளே அவருக்குப் பதிலடி கொடுத்தார். பாஜக கர்நாடகாவில் படுதோல்வி அடைந்தது.

உத்தவ் தாக்கரே, சிவசேனா (யுபிடி) தலைவர்