states

img

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியை அகற்றுவோம்!

மும்பை “வரவிருக்கும் மகாராஷ்டிரா சட்ட மன்ற தேர்தலில் பாஜக தலை மையிலான மஹாயுதி கூட்ட ணியை ஆட்சியில் இருந்து அகற்றுவோம்” என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக் கத்தில் அவர் மேலும் கூறுகையில், “மகா ராஷ்டிராவின் பொருளா தாரத்தை படிப்படியாக அழிக்கும் பாஜக வின் சதி அம்மாநில மக்கள் முன் தற்போது அம்பலமாகியுள்ளது. தனது வகுப்புவாத அரசியலுக்காக மராட்டிய சமூகம் மற்றும் அரசியல் கட்சிகளின் வரலாற்று நல்லி ணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பாஜக உடைத்துவிட்டது. பொருளாதார ரீதி யாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மகாராஷ்டிரா நலிவடைந்தி ருக்க வேண்டும் என்றே பாஜக விரும்பு கிறது. பாஜகவின் மெகா ஊழல் சிவாஜி போன்ற பெரிய மனிதர்களின் சிலைகளைக் கூட விட்டுவைக்கவில்லை. பெண்களை இழி வுபடுத்தியவர்களை அரசியல் தலைமை க்கு கொண்டு வந்து பாஜக இழிவான அரசி யல் செய்து வருகிறது. மகாராஷ்டிராவின் முற்போக்கு சமூகம் இதையெல்லாம் புரிந்து கொண்டு பாஜக செய்யும் இந்த மோசடியை முறியடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. வருகிற மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மஹா யுதி கூட்டணியை ஒருங்கிணைந்து  ஆட்சியில் இருந்து அகற்றுவோம்” என அவர் கூறினார்.