states

img

பிரதமர் மோடிக்கு சிவாஜி தலைப்பாகை மகாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு

பிரதமர் மோடி தான் போட்டி யிடும் வாரணாசி மக்களவை தொகுதியில் (உத்தரப்பிரதே சம்) கங்கை மற்றும் காலபைரவர் கோவில் பூஜை என சிறப்பு ஷூட்டிங் குடன் புதனன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் ஒன்றிய அமைச்சர்கள், மாநில முதல் வர்கள் என பல்வேறு தேசிய ஜன நாயக கூட்டணி கட்சித் தலைவர்கள்  பங்கேற்ற நிலையில், வாரணாசி யில் பிரதமர் மோடிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித்பவார்) தலைவர் பிரபுல் படேல் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் தலைப் பாகையை அணிவித்து கவுரவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

பிரபுல் படேலுக்கு மரபு தெரியாதா?

பொதுவாக மராத்திய மக்களின் பாரம்பரியத்தின்படி ஒருவரை கவுரவிக்க வேண்டுமானால் சிவாஜி யின் தலைப்பாகையை கையில் தருவது தான் மரபு. ஆனால் பிரபுல் படேல் மரபுகளை மீறி மோடிக்கு சிவாஜியின் தலைப்பாகையை தலையில் அணிவித்துள்ளார். இத ற்கு மராத்திய மக்கள், மகாராஷ்டிரா அரசியல் கட்சியினர் கடும் கண்ட னம் தெரிவித்து வருகின்றனர்.

சரத் பவார் கண்டனம்

“விருப்பத்தின் பேரில் ஒருவ ருக்கு சிவாஜி தலைப்பாகை மூலம்  கவுரவிக்க வேண்டுமானால் கையில் தர வேண்டும். ஆனால் பிரதமர் மோடிக்கு தலைப்பாகையை அணி வித்து சிவாஜியை அவமதித்து விட்ட னர். இது ஏற்கத்தக்கதல்ல. இதற்கு தகுந்த பாடம் புகட்டும் வரை சுய மரியாதை மிக்க மராட்டிய மக்கள் ஓயமாட்டார்கள்” என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கண்டனம் தெரிவித்துள்ளார். 

;