states

img

தனியாருக்கு அரசு காண்ட்ராக்ட்டை வழங்க ரூ. 12 கோடி லஞ்சம்

பெங்களூரு, செப்.19- லஞ்ச முறைகேட்டு வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் பலர் மீது லோக் ஆயுக்தா காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. பாஜக மூத்த தலைவரான எடியூரப்பா, கடந்த 2019 முதல் 2021 வரை கர்நாடக முதல்வராக பதவி வகித்த காலகட்டத்தில், பெங்களூரு வளா்ச்சி ஆணையம் (Bangalore Development Authority - BDA) சாா்பில் பிதரஹள்ளி பகுதி கோனதாசபுராவில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு திட்ட மிடப்பட்டு, ‘ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்‌ ஷன்ஸ்’ என்ற தனியார் நிறுவனம்  ஒன்றுக்கு காண்ட்ராக்ட் விடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த ‘ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ்’ நிறுவனத்திடம் முதல்வர் எடியூரப்பா மற்றும் அவ ரது குடும்பத்தினர் ரூ.12 கோடி லஞ்சம் வாங்கிக் கொண்டே காண்ட்ராக்ட் வழங்கியதாகவும், மேலும், இந்த லஞ்சப் பணம், எடி யூரப்பா குடும்ப நபா்கள் நடத்தும்  போலி நிறுவனங்கள் வாயிலாக பெறப் பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இதுதொடர்பாக, விசாரணை நடத்துமாறு சமூக ஆர்வலர் டி.ஜே. ஆபிரகாம் என்பவர்,  லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் மனு அளித் தார். ஆனால், லோக் ஆயுக்தா நீதி மன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. இதனால், டி.ஜே.ஆபிரகாம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், டி.ஜே.ஆபிரகாம் புகார் மீது விசாரணை நடத்தும்படி லோக் ஆயுக்தா நீதி மன்றத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, எடியூரப்பா குடும்பத்தினர் மீதான புகாரை ஏற்றுக்கொண்ட லோக் ஆயுக்தா நீதி மன்றம், ரூ.12 கோடி லஞ்ச ஊழல் விவகாரத்தில், எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து, சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும்; விசாரணை அறிக்கையை  நவம்பர் 2-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, பி.டி.ஏ. குடி யிருப்பு கட்டுமானத்  திட்டத்தில் நடந்த ஊழல் குறித்து முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, அவ ரது மகனும் மாநில பாஜக துணைத் தலைவருமான விஜயேந்திரா, பேரன் மற்றும் மருமகன்கள், கூட்டு றவுத்துறை அமைச்சர் எஸ்.டி.சோம சேகர், சசிதர் மரடி, சஞ்சய், சந்திரகாந்த், கட்டுமான நிறுவன முதலாளி ராமலிங்கம், பிரகாஷ், ரவி உள்ளிட்டோர் மீது பெங்களூரு லோக் ஆயுக்தா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

;