states

விவசாயிகள் விரோத பாஜகவை வீழ்த்துவோம்!

பெங்களூரு, மே 2- கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், “விவ சாயிகள் விரோத, மக்கள் விரோத வகுப்பு வாத பாஜக”வை வீழ்த்துவோம் என புத னன்று பெங்களூரில் விவசாய அமைப்புகளின் சிறப்பு மாநாடு நடை பெற்றது. இந்த சம்யுக்த கிசான் பஞ்சாயத்தில் 20 அமைப்புகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தலைவர்கள் பங்கேற்றனர்.  ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) தலைவர்கள் ஹன்னன் முல்லா, யோகேந்திர யாதவ், கவிதா குரு கந்தி, அவிக் சாஹா ஆகியோர் உரையாற்றி னர். கர்நாடக விவசாயிகள் சங்கத் தலை வர்கள் ஜி.சி.பாயாரெட்டி, படகலபுரா நாகேந்திரா, ஹெச்.ஆர். பசவராஜப்பா, வேளாண் விஞ்ஞானி பிரகாஷ் கம்மராடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இப்பஞ்சாயத்தில் பங்கேற்ற அழைக்கப் பட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக தலைவர்களி டம் விவசாயிகளின் கோரிக்கை சாசனம் வழங்கப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கை களை தங்களது தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். இம்மாநாட்டில், விவசாய அமைப்பு களின் முக்கியப் பங்களிப்புடன் கர்நாடக சட்ட மன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்; “விவசாயிகள் விரோத, மக்கள் விரோத, வகுப்புவாத பாஜக-வை வீழ்த்துவோம்”; வீட்டுக்கு வீடு பிரச்சாரம் செய்து, இதனை அடித்தட்டு மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.