பெங்களூரு,டிச.22- கர்நாடக மாநிலம் பெங்களூருவின் வடக்கு-வடகிழக்கு பகுதியில் டிசம்பர் 22 புதனன்று காலை 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்எஸ்சி) தெரிவித்துள்ளது. புதனன்று காலை 7:09 மணிக்கு நில நடுக்கம் 3.1 ரிக்டர் அளவில், பெங்களூரு வில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் 11 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் காலை 7:14 மணிக்கு இரண்டாவது முறை நில நடுக்கம் 3.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து 66 கிலோமீட்டர் தொலைவில் 23 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.