states

img

விவசாயிகள் போராட்டம்:  பல தில்லி சாலைகள் மூடல்

விவசாயிகள் போராட்டம் வலுப்பெற்று வருவதன் காரணமாக, தில்லி எல்லைகளான சிங்கூ, திக்ரி, காசிபூர் மற்றும் (தில்லி-நொய்டா) சில்லா எல்லைகளில் உள்ள சாலைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.

தில்லி, போக்குவரத்துக் காவல்துறை, தங்கள் ட்விட்டர் பக்கத்தில், பயணிகள் மாற்று மார்க்கங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

வியாழன் அன்று, விவசாய சங்கங்கள், தங்கள் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிமடுக்கா விட்டால்,  ரயில் பாதைகளையும் மறிக்க இருப்பதாக அறிவித்திருக்கின்றன. அரசாங்கத்தின் எழுத்துபூர்வமான உறுதிமொழியை விவசாய சங்கங்கள் நிராகரித்திருப்பதை அடுத்து, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

புதிய வேளாண் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதார விலையிலிருந்து பாதுகாப்பு அம்சங்களை ஒழித்துக்கட்டி இருப்பதாகவும், தங்களுக்கு வருமானத்தை உத்தரவாதப்படுத்திவந்த மண்டிகள் எனப்படும் சந்தைகளையும் அப்புறப்படுத்திவிட்டதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

ஆனாலும், அரசாங்கமானது குறைந்தபட்ச ஆதார விலை அமைப்புமுறை தொடரும் என்றும், புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு அவர்களுடைய பயிர்களை விற்பனை செய்வதற்கு, நிறைய வாய்ப்புகளை வாரி வழங்கியிருப்பதாகவும் கூறிக்கொண்டிருக்கிறது.

;