டிசம்பர் 8 - பாரத் பந்த்திற்கு ஆம் ஆத்மி கட்சி தன் முழு ஆதரவை அளித்துள்ளது.
இது தொடர்பாக தில்லி, மாநில முதல்வர், அரவிந்த் கேஜரிவால் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
அனைத்து விவசாயிகள் சங்கம் விடுத்துள்ள டிசம்பர் 8 - பாரத் பந்த்திற்கு, ஆம் ஆத்மி கட்சி தன் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.
நாடு முழுதும் உள்ள ஏஏபி ஊழியர்கள் அதற்கு அமைதியான முறையில் ஆதரவு அளித்திடுவார்கள். நாட்டு மக்கள் அனைவரும் விவசாயிகளுக்கு ஆதரவு அளித்திட வேண்டும் என்றும், பாரத் பந்த்தில் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.”
ஏஏபி கன்வீனர் கோபால் ராய் கூறுகையில், அனைத்து மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் ஏஏபி தலைவர்களும், தொண்டர்களும் விவசாயிகள் பந்திற்கு ஆதரவாக நிற்பார்கள் என்றால். இது விவசாயிகளின் போராட்டம் மட்டுமல்ல, இது நம் அனைவரின் போராட்டமாகும். இந்த விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டால், பின் இந்த நாடே பாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தில்லியில் இந்தக் கடுங்குளிரில் விவசாயிகள் - இளையவர்களும் முதியவர்களும் - சாலையோரங்களில் படுத்து உறங்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். பாஜக அரசாங்கமோ பேச்சுவார்த்தை என்று கூறி இழுத்தடித்துக்கொண்டிருக்கிறது, உருப்படியான தீர்வுக்கு வர அது தயாரில்லை என்று அவர் மேலும் கூறினார்.
தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி - சிவ சேனா ஆதரவு
இதேபோன்று தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியும், சிவ சேனாவும் பாரத் பந்த்தை ஆதரி