states

img

பாஜக பிரமுகருக்கு சமூகப் பொறுப்பு இல்லையா?

உயர்நீதிமன்ற நீதிபதி  சரமாரி கேள்வி  

மதுரை, மார்ச் 17-  பீகார் மாநிலத் தொழிலாளர்கள் தமிழ கத்தில்  தாக்கப்படுவது போன்று போலி வீடியோ வை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியது ஏன்? பாஜக பிரமுகருக்கு சமூகப் பொறுப்பு இல்லையா? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பி னார்.  தமிழகத்தில் பீகார் உள்ளிட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி யது. இது தொடர்பாக தமிழக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்தி வீடியோ வை வெளியிட்டது தில்லியை சேர்ந்த பாஜக  பிரமுகர் பிரசாந்த்குமார் உம்ராவ் என தெரிய வந்தது. பாஜக பிரமுகரின் இந்த இழிவான செயலை அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் கடுமையாக கண்டித்தனர். போலி வீடியோ வெளியிட்ட பாஜக பிர முகர் மீது தூத்துக்குடி காவல்துறையினர்  வழக் குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க பிரசாந்த் குமார் உம்ராவ் உயர்நீதிமன்ற மதுரை  கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். 

பல பொய் தகவல்களை பரப்பினார் பாஜக பிரமுகர்

இந்த மனு மீதான விசாரணை வியாழ னன்று நீதிபதி  இளந்திரையன் முன்பு நடைபெற் றது. விசாரணையின் போது தமிழ்நாடு அரசின்  தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முக மது ஜின்னா  ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்து, வாதிடுகையில், அமைதியாக உள்ள  தமிழகத்தில் திட்டமிட்டு இரு மாநில தொழிலா ளர்களுக்கு இடையில் பிரச்சனையை உரு வாக்கும் விதமாக இவர் டிவிட் செய்துள்ளார்.  இது இவரின் முதல் டிவிட் கிடையாது. இது போன்று பல சட்ட விரோதமான பொய்யான தக வல்களை டிவிட் செய்துள்ளார். இவ்வாறு இவர்  வீடியோ வெளியிட்டதால் தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழல் உருவானது. ஆனால் தமிழ் நாடு அரசு உடனடியாக வடமாநிலத் தொழி லாளர்களை கண்காணிக்க குழு அமைத்து,  அமைதி உருவாக்கப்பட்டது. இதே போல்  ஜார் ஜண்ட் மாநிலத்தில் இருந்து  8 பேர் கொண்ட அதி காரிகள் குழு வந்து ஆய்வு செய்தது.  தமிழகத்தின் முதலமைச்சர் நேரில் சென்று  வட மாநில  தொழிலாளர்களை  சந்தித்து அவர் களுக்கு பாதுகாப்பாக இருப்பதாக கூறினார்.  மேலும் உதவி நம்பர் அறிவிக்கப்பட்டது .அதில்  தினந்தோறும் ஆயிரக்கணக்கான தொலைபேசி  அழைப்புகள் பாதுகாப்பு கோரி போன் செய்த னர். இவ்வாறு விரைந்து செயல்பட்டதால் மாநி லத்தில் சட்டம்- ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. எனவே இவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து நீதிபதி, மனுதாரர் வழக்கறிஞரிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.  நீதிபதி கூறுகையில், இவர் ஒரு வழக்கறி ஞர். ஏன் இது போன்ற வீடியோவை பகிர  வேண்டும். இதன் தீவிரத் தன்மை தெரியாதா?  எவ்வளவு பிரச்சனை இதனால் ஏற்படு கிறது என தெரியாதா ?அவர்  எங்கு வேண்டு மானாலும் இருக்கட்டும்.அவருக்கு சமூகப் பொறுப்பு இல்லையா..? ஒவ்வொரு நபருக்கும்  சமூக பொறுப்பு வேண்டும் என்று தெரி வித்தார். மேலும் வழக்கு தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டது.