பாட்னா, ஜன. 28 - பாஜகவுடன் கள்ள பேரம் நடத்தி, பீகார் மக்களுக்கு துரோகம் செய்து ஓட்டம் பிடித்த நிதிஷ்குமார், பாஜக ஆதரவுடன் தொடர்ந்து முதல்வர் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கிறார். பீகார் மாநிலத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா தள தலைவரான நிதிஷ் குமார் முதல்வ ரானார். அடுத்த 2 ஆண்டுகளில் பாஜக வுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஏற்பட்டதால் 2022இல் தேசிய ஜனநா யக கூட்டணியிலிருந்து விலகி ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி ஆகிய கட்சிகளுடன் இணை ந்து “மகாகத் பந்தன்” என்ற பெயரி லான கூட்டணி ஆதரவுடன் மீண்டும் முதல் வராக பொறுப்பேற்றார் நிதிஷ் குமார். மேலும் பீகாரில் வீழ்த்தியதை போல தேசிய அரசியலிலும் பாஜக வை வீழ்த்த வேண்டும் என 28 எதிர்க் கட்சி கட்சிகளை உள்ளடக்கிய “இந்தி யா” கூட்டணியிலும் அங்கம் வகித்தார். “இந்தியா” கூட்டணியை உருவாக்க முக்கிய பங்காற்றியதால் கூட்டணி ஒருங்கிணைப்பாளராக கூட நிதிஷ் குமார் முன்மொழியப்பட்டார்.
தடம் புரண்ட நிதிஷ் ஆனால் நிதிஷ் குமார் எவ்வித விளக் கமும் அளிக்காமல் தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என கூறியிருந்த நிலை யில், “இந்தியா” கூட்டணியில் இருந்து கொண்டே மம்தா, அரவிந்த் கெஜ்ரி வால், லாலு பிரசாத் ஆகியோரை கடு மையாக விமர்சித்தார். இந்த சர்ச்சை அடங்குவதற்குள் பீகாரில் 2 முறை முதல்வராக இருந்த கற்பூரி தாக்கு ருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு தொடர்பாக பிரதமர் மோடியை நிதிஷ் குமார் வாழ்த்திப் பேசினார்.
அடுத்து ராஷ்ட்ரிய ஜனதா தள அமைச்சர்களை நீக்கிவிட்டு, பாஜக உடன் கூட்டணி ஆட்சி அமைக்க நிதி ஷின் ஐக்கிய ஜனதாதளம் திட்ட மிட்டுள்ளதாக லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு தகவல் சென்றது. இந்த தகவலை அடுத்து லாலு பிரசாத்தின் இளைய மகளான ரோகிணி தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்தார். இதற்கு நிதிஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்து லாலு குடும்பத்தை நேரடி யாக விமர்சித்தார். தொடர்ந்து நிதிஷ் “மகாகத் பந்தன்” கூட்டணியில் இருந்து விலகி, பாஜக கூட்டணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. முக்கியமாக ரோகிணி டுவிட்டர் விவ காரத்தை சாக்காக பயன்படுத்திக் கொண்ட நிதிஷ் குமார் வெள்ளி, சனி என இரண்டு நாட்கள் கண்ணாமூச்சி காட்டிவிட்டு, ஞாயிறன்று காலை பெய ரளவில் ஐக்கிய ஜனதாதள எம்எல்ஏ-க்கள் கூட்டத்தை கூட்டி, கூட்டம் முடிந்த பின்பு பாஜக கூட்டணியில் இணைவ தாக அறிவித்தார்.
அடுத்த சில நிமிடங் களில் பீகார் ஆளுநர் ராஜேந்திர அர்லே கரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்து, பாஜக தலைவர்களுடன் இணைந்து புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தொடர்ந்து ஞாயிறன்று மாலை 5 மணியளவில் நிதிஷ் குமார் பாஜக ஆதரவுடன் முதல்வராக பொறுப்பேற் றார். துணை முதல்வர்களாக பாஜக வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா ஆகியோர் பதவியேற்ற நிலை யில், 8 பேர் அமைச்சர்களாக பொறுப் பேற்றுக் கொண்டனர். இவர்களில் 3 பேர் பாஜகவையும், 3 பேர் ஐக்கிய ஜனதா தளத்தையும், ஒருவர் ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா(மதச்சார்பின்மை) கட்சியையும் சேர்ந்தவர்கள் ஒருவர் சுயேட்சை எம்எல்ஏவும் ஆவார்.