states

img

பசு கடத்தியதாக இஸ்லாமிய இளைஞர் அடித்து கொலை - இந்துத்துவா கும்பல் வெறிச்செயல்

பீகாரில் பசு கடத்தியதாக குற்றம் சாட்டி இஸ்லாமிய இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்  அப்பகுதி மக்களிடையே  கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து தாத்திரி அக்லக் தொடங்கி நாடு முழுவதும் பலர் பசு பாதுகாப்பு என்ற பெயரில்  இந்துத்துவா கும்பல்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னா, புல்வாரிஷரீப் பகுதியைச் சேர்ந்த 32 வயதான இளைஞர் முகம்மது ஆலம்கீர். இவரை அதிகாலை 3 மணியளவில் ஸ்ரீகாந்த் ராய் என்பவர் தனது கால்நடை கொட்டகையில் இருந்து மாடுகளைத் திருட முயன்றதாக தாக்கி உள்ளார்.   இதையடுத்து அப்பகுதியில் இருந்த  இந்துத்துவமா அமைப்புகளை சேர்ந்த சுமார் 10 பேர் முகமது ஆலம்கீரை கடுமையாக தாக்கி உள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே அவர் மயக்கம் அடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆலம்கீர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 


 

;