பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் - ஆர்ஜேடி - இடதுசாரிகள் அடங்கிய “மகா” கூட்டணியில் முதல்வராக இருந்த ஐக்கிய ஜனதா தலைவர் நிதிஷ் குமார், பாஜகவின் மிரட்டல் மற்றும் கர்ப்பூரி தாக்கூ ருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு மூலம் மக்களவை தேர்தலுக்கு முன் “மகா” மற்றும் “இந்தியா” கூட்ட ணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்து முதல்வர் நாற்காலியில் அமர்ந் தார். நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவி வழங்கினாலும் முக்கிய பொ றுப்புகள், பாஜக சார்பில் துணை முதல்வராக நியமிக்கப்பட்ட சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா ஆகியோர் கையில் உள்ள நிலையில், நிதிஷ் குமார் வெறும் பொம்மை முதல்வ ராக உள்ளார்.
இது நிதிஷ் குமாருக்கு மட்டு மின்றி ஒட்டுமொத்த ஐக்கிய ஜனதா தள கட்சிக்கே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கடந்த மார்ச் மாதம் தகவல் வெளியாகியது. எனினும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தில்லி மற்றும் பாட்னாவில் சில கூட்டங்களை நடத்தி இந்த விஷ யத்தை மூடி மறைத்தார்.
நிதிஷ் குமார் “தலைமறைவு”
அதன்பிறகு மக்களவை தேர்த லுக்கான தொகுதி பங்கீட்டு விவகா ரத்திலும் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி இடையே விரிசல் ஏற் பட்டுள்ளதாக அடுத்தகட்ட செய்தி கள் வெளியாகின. இந்த செய்திகளு க்கு பிறகு ஐக்கிய ஜனதாதள தலைவ ரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் வெளியில் தலைகாட்டுவதை குறைத்தார். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியுடன் ஒன்றிரண்டு பிரச்சாரக் கூட்டங்க ளில் நிதிஷ் குமார் “மேடை அவ தாரம்” எடுத்தார். அதில் ஒரு கூட் டத்தில் பிரதமர் மோடியால் நிதிஷ் குமார்அவமானப்படுத்தப்பட்டதாகவும் ஐக்கிய ஜனதாதள மூத்த தலை வர்கள் குமுறினார்கள். இதற்கான வீடியோ ஆதாரமும் வெளியான நிலையில், இந்த சம்பவத்திற்கு பிறகு நிதிஷ் குமார் பாஜவுடனான மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை யே புறக்கணிக்கும் வேலையை வெளிப்படையாக துவங்கினார். பிரதமர் மோடி தான் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய தேசிய ஜன நாயக கூட்டணியில் உள்ள அனை த்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தார். அனைத்து தலைவர்க ளும் தவறாமல் மோடியுடன் வார ணாசியில் ஊர்வலத்துடன் வேட்பு மனு நிகழ்வில் பங்கேற்ற நிலை யில், பாஜக கூட்டணியில் மிக பெரிய கட்சிகளில் ஒன்றான ஐக்கிய ஜனதாதளத்தின் தலைவர் நிதிஷ் குமார் பங்கேற்காதது கடும் சர்ச்சை யை கிளப்பியது. மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது “இந்தியா” கூட்டணி பற்றி ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் அவ்வளவாக விமர்சனம் செய்யாமல், மிகவும் சாந்தமாகவே பிரச்சாரம் மேற் கொண்டனர். குறிப்பாக பீகார் மாநி லத்தில் பாஜக போட்டியிடும் தொகுதி யில் ஐக்கிய ஜனதா தள தலைவர் கள் இருந்ததாக எவ்வித தகவலும் இல்லை. இவ்வாறு பல்வேறு சம்ப வங்களால் பீகார் மாநிலத்தில் எந்த நேரத்திலும் ஆட்சி கவிழலாம் என்றும், மக்களவை தேர்தல் முடிவு க்கு பின்னர் நிதிஷ் குமார் தனது முடிவை அறிவிக்கலாம் என கடந்த ஒரு மாதமாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், பீகாரில் ஆளு நர் மூலம் ஆட்சி நிர்வாகம் நடை பெற்று வருவதாக “இந்தியா” கூட்ட ணியில் அங்கம் வகிக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்வ ருமான தேஜஸ்வி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகை யில்,”பீகார் மாநிலத்தில் அரசு அதி காரிகளுடன் கூட்டங்களை நடத்து வது மற்றும் அறிவுறுத்தல்களை வழங்குவது அனைத்தும் ஆளுநர் தான் என்பதை நான் அறிந்துள் ளேன். மக்களவை தேர்தல் களத்தில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் ஆகிய இரண்டும் தத்தம் தொகுதிக ளில் மட்டுமே கவனம் செலுத்துகின் றன. இந்த சம்பவங்கள் அனைத்தும் மக்களவை தேர்தல் முடிவு வெளியா கும் தேதியான ஜூன் 4 தேதிக்குப் பிறகு, பீகார் எதற்கோ பெரிய சாட்சி யாக அமையப் போகிறது என்ற எனது அச்சத்தை உறுதிப்படுத்து கிறது. மக்களவை தேர்தலுக்குப் பிறகு சச்சா (நிதிஷ் குமார்) ஒரு பெரிய முடிவை எடுப்பார் என்று நான் கணித் துள்ளேன்” என்று கூறினார்.
கலக்கத்தில் பாஜக
தேஜஸ்வி ஒவ்வொரு முறையும் தனக்கு தெரிந்த கருத்துக்களை அடிக்கடி கூறிவருகிறார். ஆனால் இந்த கருத்திற்கு பாஜக மட்டுமே மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், நிதிஷ் குமார் மற்றும் ஐக்கியஜனதா தள தலைவர்கள் எவரும் தேஜஸ்வி யின் கருத்திற்கு எதிர்க் கருத்தோ அல்லது சாதாரண ஆட்சேபனை யோ தெரிவிக்காமல் அமைதி காத்து வருவது தான் பாஜகவிற்கு பீதியை ஏற் படுத்தியுள்ளது. தற்போது கூட,“பீகாரில் ஆளுநர் மூலம் ஆட்சி நிர்வாகம்” என்ற தேஜஸ்வியின் கருத்திற்கு ஐக்கிய ஜனதா தளம் எதுவும் கூறாமல் அமைதியாக இருப்பது பாஜகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எது எப்படி இருந்தாலும் ஜூன் 4 அன்று வெளியாகும் மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு பீகாரில் கண்டிப்பாக ஆட்சியும், காட்சிக ளும் மாறும் என அம்மாநில பிராந்திய ஊடகங்கள் அடிக்கடி செய்தி வெளியிட்டு வருகின்றன. ஜூன் 4க்கு பிறகு என்ன நடக்கிறது என்பது இனிமேல் தான் தெரியவரும்.