states

img

இஷ்டத்திற்கு கூடிக் குறையும் பீகார் துணைமுதல்வரின் வயது... 20 ஆண்டுகளில் 16 வயது மட்டுமே அதிகரிப்பு!

பாட்னா:
காலத்தைப் பிடித்து வைக்க முடியாது. ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். இது இயற்கை. ஆரோக்கியத்தை கடைப்பிடிப்பதன் மூலம் இளமையானவர் போன்ற தோற்றத்தைகாட்ட முடியுமே தவிர வயதை கூடுவதை தடுக்க முடியாது.ஆனால், பீகார் மாநிலத்தில் தற்போது பாஜக சார்பில் துணைமுதல்வர் பொறுப்பை ஏற்றிருக்கும்தர்கிஷோர் பிரசாத்துக்கு மட்டும்,தேர்தல் காலங்களில் இஷ்டத்திற்கு வயது கூடியதும், குறைந்ததும்   வெளியுலகத்திற்கு தெரிய வந்துள்ளது.

கடந்த 2005-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும்போது, தர்கிஷோர் பிரசாத்துக்கு வயது 48 ஆக இருந்துள்ளது. அதன்பிறகு 5 ஆண்டுகள் கழித்து 2010-ஆம் ஆண்டு போட்டியிடும் போது, வெறும் 1 வயது மட்டுமே அதிகரித்து 49 வயதாக இருந்துள்ளது. பின்னர், 2015-ஆம் 52 வயதை எட்டி (?) உள்ளது. மூன்றாவது ஐந்தாண்டில் 3 வயது மட்டும் அதிகரித்துள்ளது.இந்நிலையில், 2020 நவம்பரில் நடைபெற்ற தேர்தலிலும் தர்கிஷோர் பிரசாத் வேட்புமனு தாக்கல்செய்துள்ளார். ஆனால், இந்த முறை அவர் தனது வயதை ஒரேயடியாக 64 என்று காட்டி அதிர்ச்சி அளித்துள்ளார். அதாவது, நான்காவது ஐந்தாண்டில் மட்டும் அவருக்கு 12 வயது கூடி யிருக்கிறது.இவை எல்லாமே தர்கிஷோர் பிரசாத், அவராகவே பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்த வயது விவரங்கள்தான். இவை பீகாரில் தற்போது சிரிப்பாய் சிரிக்கிறது.