states

img

மாநிலச் செயலாளர் மேசையிலிருந்து...

பீகாரில் சாதிவாரி ஆய்வு முடிந்து, விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  அதற்கு எதிராக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் நிற்கவில்லை.  ஆனால்‌ ஒன்றிய அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை புறந்தள்ளி வருகிறது‌. எனவே தமிழ்நாடு அரசு, மாநில அளவில் சாதிவாரி ஆய்வினை அறிவித்திட வேண்டும் என சி.பி.ஐ(எம்) சார்பில் வலியுறுத்துகிறோம்.  தமிழ்நாட்டிலும் சாதிவாரி ஆய்வினை முன்னெடுப்பது, நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்து முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுச் சேர்ப்பதாக அமைந்திடும்.