தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30 அன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடை பெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் எனவும், காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும் எனவும், பாஜக, ஏஐஎம்ஐஎம் கட்சிகள் ஒரு சில இடங்களில் வெல்லும் என கருத்துக்கணிப்புகள் வெளியா கின. இந்த கருத்துக்கணிப்புகள் இரண்டு வாரத்திற்கு முன்பு வெளியா னது என்ற நிலையில், இந்த கருத் துக்கணிப்பு முடிவால் ஆளும் பிஆர்எஸ் கட்சி பதற்றம் இல்லாமல் காங்கிரஸ் கட்சியை கடுமையாகவும், பாஜகவை மென்மையாகவும் விமர் சித்துப் பிரச்சாரம் மேற்கொண்டது.
இந்நிலையில், நடப்பு வாரத்தில் (கடந்த 3 நாட்களாக) வெளியான கருத் துக்கணிப்பு முடிவுகள் எல்லாம் தலை கீழாக மாறியுள்ளது. பிரபல தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனமான லோக் போல் (LOK POLL) நிறுவனம் செவ்வாயன்று வெளியிட்ட கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கட்சி 69 முதல் 72 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றும் என்றும், ஆளும் பிஆர்எஸ் 36 முதல் 39 தொகுதிகளில் வெல்லும் எனவும், ஏஐஎம்ஐஎம் கட்சி 5 முதல் 6 இடங்களிலும், பாஜக 2 முதல் 3 தொகுதிகளை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தகவல் வெளி யாகியுள்ளது.
மேலும் பிஆர்எஸ் கட்சிக்கு செல் வாக்கு சரிந்துள்ளது என தெலுங்கானா மாநில உளவுத்துறையும் ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இதனால், கலக்கம டைந்த பிஆர்எஸ் தலைவரும், முதல்வ ருமான சந்திரசேகர ராவ், மற்றும் அவ ரது மகன் கே.டி.ராமாராவ் தேர்தல் வியூக அமைப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் ரகசியமாக அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், சந்திரசேகர ராவ் - பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூக அவசர ஆலோசனை பலனளிக்குமா என்பது டிசம்பர் 3 அன்றுதான் தெரி யும் என்பது குறிப்பிடத்தக்கது.