ஐதராபாத், டிச.17- ஐதராபாத்தில் நடைபெற்ற 17ஆவது அகில இந்திய மாநாட்டில் எஸ்எப்ஐ தலை வராக வி.பி.ஷானு (கேரளா) பொதுச் செயலாளராக மயூக் பிஸ்வாஸ் (வங்கா ளம்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஸானு தொடர்ந்து மூன்றாவது முறையாக வும், மயூக் இரண்டாவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒருவர் தொடர்ந்து மூன்றாவது தடவையாக தலை வர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். அகில இந்திய துணைத் தலைவர்களாக கே.அனுஸ்ரீ (கேரளா), சங்கீதா தாஸ் (அசாம்), ஏ.அசோக் (ஆந்திரப் பிரதேசம்), நாகராஜு (தெலுங்கானா), நிதிஷ் நாரா யணன் (மையம்) பிரதிகுர் ரஹ்மான் (வங்காளம்) ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். இணைச் செயலாளர்களாக ஆதர்ஷ் எம்.சஜி (மையம்) மற்றும் பி.எம். அர்ஷா (கேரளா), ஸ்ரீஜன் பட்டாச்சார்யா (வங்காளம்), தீப்சிதா தார் (மையம்), சந்தீபன் தேவ் (திரிபுரா) மற்றும் டினித் தண்டா (மையம்) ஆகியோர் தேர்ந்தெடுக் கப்பட்டனர்.
மத்திய செயற்குழு உறுப்பினர்களாக நிருபன் (தமிழ்நாடு), சுபாஷ் ஜாகர் (ராஜஸ் தான்), அமித் தாக்கூர் (இமாச்சலப் பிர தேசம்), ஐஷி கோஷ் (தில்லி) ஆகியோ ரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 19 பேர் கொண்ட நிர்வாகக் குழுவில் ஒரு இடம் காலி யாக உள்ளது. 83 பேர் கொண்ட மத்திய குழு வில் மூன்று காலியாக உள்ளன. அகில இந்திய அளவில் மாபெரும் போராட்டங்களை முன்னின்று நடத்திய அனுபவத்துடன் எஸ்எப்ஐ தலைவராக வி.பி. ஷானு மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டார். குடியுரிமை திருத்தச் சட்டம், கல்வி வணிகமயமாக்கல், வகுப்பு வாதத்தை இலக்காகக் கொண்ட ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிராக ஷானு வின் தலைமையில் மாணவர் சங்கம் தீவிர மாக தலையிட முயன்றது. கோவிட் பெருந் தொற்று காலத்திலும் தன்னார்வச் செயல் பாடுகள் மூலமாகவும் இந்த அமைப்பு முன்னுதாரணமாக அமைந்தது. 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 இடைத்தேர்தல்களில் மலப்புரம் தொகுதியில் போட்டியிட்டார். கேரளா வில் 17ஆவது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இளையவரான இவர், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர். வாலாஞ்சேரி யைச் சேர்ந்த ஸானு, சிபிஎம் மலப்புரம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.பி.ஜக்காரியா, பி.வி.ரம்லா ஆகியோரின் மகன். ஆராய்ச்சி மாணவியான காதா எம்.தாஸ் இவரது மனைவி. இரண்டாவது முறையாக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மயூக் பிஸ்வாஸ், மேற்கு வங்கத்தை பூர்வீக மாகக் கொண்டவர். பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளின் ஆராய்ச்சி மாண வர் ஆவார். சிபிஎம் மேற்கு வங்க மாநிலக் குழு உறுப்பினராக உள்ளார். அமலேந்து பிஸ்வாஸ் மனிஷாவின் மகன்.