states

img

“கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளே வறுமை அதிகரிக்கக் காரணம்”

ஹனம்கொண்டா, (தெலுங்கானா) செப்.11- கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கை கள், கார்ப்பரேட் கொள்ளைகள் ஆகி யவை தான் நாட்டின் வறுமை அதிகரிப்பிற்குக் காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் கூறினார். தெலுங்கானாவில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க தெலுங்கானா ஆயுத எழுச்சியை நினைவுகூரும் வகையில் பல்வேறு நிகழ்வுகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெலுங்கானா மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. பத்து நாட்கள் இந்த கொண்டாட்டம் நடைபெறுகிறது.  இதன் தொடக்க நிகழ்வாக ஹனம்கொண்டாவில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், பி.சுதர்சன், மாவட்டச் செயலாளர் சக்ரபாணி ஆகியோர் உரையாற்றினர்.

பொதுக்கூட்டத்தில் பேசிய பிருந்தா காரத், ஒன்றிய பாஜக ஆட்சி பிரிவினைவாத அரசியலுக்கும், எதிர்ப்புக் குரல்களை ஒடுக்கும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கும் பெயர் போனது. அவர்களின்  கார்ப்ப ரேட் ஆதரவுக் கொள்கைகள், கார்ப்ப ரேட் கொள்ளை  ஆகியவை தான் நாட்டின் வறுமை அதிரிப்பிற்குக் கார ணம். போதிய வருமானம் இல்லாத தால். மக்களின் வாழ்நிலை மேலும் மோசமாகி வருகிறது”என்றுசாடினார். பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணி அர சியல் ஆதாயங்களுக்காக தெலுங் கானாவில் ‘மதவெறி விஷத்தைப்’ பரப்புகிறது. பிளவு சக்திகளுக்கு’ எதி ராக ஒருங்கிணைந்த போராட்டத்தை கட்டியெழுப்புவது தான் அதற்கு சிறந்த  மாற்று மருந்து என்றும் அவர்கூறினார். தெலுங்கானாவில் காலூன்ற முயலும் பிரித்தாளும் சக்திகளின் முயற் சிகள் ஒன்றிணைந்து முறியடிக்கப்பட வேண்டும். பட்டியல் பழங்குடியினர், பட்டியல் சமூகத்தினர், மற்றும் நிலமற்ற ஏழைகளின் உரிமைகளுக் காகப் போராடும் ஒரு பிரம்மாண்ட இயக்கத்தை தெலுங்கானாவில் உரு வாக்க வேண்டும். தெலுங்கானாவில் பாஜவுக்கு வாய்ப்பு தரக்கூடாது; இந்து-முஸ்லிம் ஒற்றுமையை பா.ஜ., தலைவர்கள் விரும்புவதில்லை என்றும் கூறினார்.  தொடர்ந்து பேசிய பிருந்தா காரத், தெலுங்கானா எழுச்சியின் போது “சாகலி ஐலம்மாவின் போராட்டக் குணம் அனைவருக்கும் எடுத்துக் காட்டாக இருந்தது. சாகலி ஐலம்மா தனது பயிரைக் காப்பாற்ற ஜமீன்தார் ராமச்சந்திரா ரெட்டிக்கு எதிராகப் போராடினார். ஆந்திர மகாசபை அந்தப் போராட்டத்துக்குத் துணை நின்றது. ஐலம்மா போராட்டம் மூவா யிரம் கிராமங்களில் பரவியது. அந்த வரலாற்றை மாற்றும் முயற்சியில் இன்று பாஜக ஈடுபடுகிறது. பாஜகவும் ஆர்எஸ்எஸ்-சும் தெலுங்கானா விவ சாயிகள் இயக்கத்தை இந்துக்களுக் கும் முஸ்லிம்களுக்கும் ஒன்றுபட்டு இடையிலான மோதலாக சித்தரித்து வருகின்றன. நிஜாம் ஆட்சிக்கு எதிராக இந்துக்களும், முஸ்லிம்களும் போராடினர்” என்றும் கூறினார்.

;