states

தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி

ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி அமைக்கிறது

புதுதில்லி, டிச.3- 4 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவில்  தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி அமைக்கிறது. தெலுங்கானா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய  5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற  நிலையில், தெலுங்கானா, மத்தியப்பிர தேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4  மாநிலங்களில் பதிவான வாக்குகள் ஞாயி றன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன.

தெலுங்கானா

119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்  கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 64 (59 வெற்றி, 5 முன்னிலை) தொகுதிகளிலும், பிஆர்எஸ் 39 (32 வெற்றி, 7 முன்னிலை) தொகுதிகளிலும், பாஜக 8 (7 வெற்றி, 1 முன்னிலை) தொகுதிகளிலும், மஜ்லிஸ் கட்சி 7 (3 வெற்றி, 4 முன்னிலை) இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி 1 தொகுதி (வெற்றி) என  வெற்றி மற்றும் முன்னிலை நிலவரங்களில் கட்சிகள் உள்ளன. பெரும்பான்மைக்கு 60  இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கி ரஸ் 64 தொகுதிகளில் வெற்றி மற்றும் முன்னி லையில் இருப்பதால் அக்கட்சி தெலுங்கா னாவில் முதல் முறையாக ஆட்சி அமைக்கி றது.

மத்தியப்பிரதேசம்

230 தொகுதிகளை கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக 164  (126 வெற்றி, 38 முன்னிலை) தொகுதிகளி லும், காங்கிரஸ் 65 (37 வெற்றி, 28 முன்  னிலை) தொகுதிகளிலும், பாரத் ஆதிவாசி  கட்சி 1 (வெற்றி) தொகுதி என தேர்தலில்  போட்டியிட்ட கட்சிகளின் வெற்றி மற்றும்  முன்னிலை நிலவரங்கள் உள்ளன. பெரும்  பான்மைக்கு 116 இடங்கள் தேவை என்ற  நிலையில், 163 இடங்களில் முன்னிலையில் உள்ள பாஜக மத்தியப்பிரதேசத்தில் ஆட்சி யை தக்கவைத்துள்ளது.

ராஜஸ்தான்

மொத்தம் 200 தொகுதிகளைக் கொண்ட  ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு வேட்பாளர் இறப்பு காரணமாக 199 தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடைபெற்றது. பாஜக 115  (114 வெற்றி, 1 முன்னிலை) தொகுதிகளி லும், காங்கிரஸ் 69 (68 வெற்றி, 1 முன்  னிலை) தொகுதிகளிலும், பாரதிய ஆதி வாசிகட்சி 3 (வெற்றி) தொகுதிகளிலும், பகு ஜன் சமாஜ் 2 (வெற்றி), ராஷ்ட்ரிய லோக்  தளம் மற்றும் ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சிகள் தலா 1 (வெற்றி) தொகுதிகளி லும், சுயேட்சைகள் 8 (வெற்றி) தொகுதி கள் என நிலவரங்கள் உள்ளன. பெரும்பான்  மைக்கு 100 தொகுதிகள் தேவை என்ற நிலை யில், பாஜக இரவு 8 மணி நிலவரப்படி 114  தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்  மூலம் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி  அகற்றப்பட்டு பாஜக ஆட்சி அமைக்கிறது.

சத்தீஸ்கர்

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர்  மாநிலத்தில் பாஜக 54 (33 வெற்றி, 21 முன்னிலை) தொகுதிகளிலும், காங்கிரஸ் 35 (18 வெற்றி, 17 முன்னிலை) தொகுதிகள்,  ஜிஜிபி ஒரு தொகுதியிலும் என 3 கட்சி களும் முன்னிலை, வெற்றி நிலவரங்களில்  உள்ளன. பெரும்பான் மைக்கு 46 இடங்கள்  தேவை என்ற நிலையில், பாஜக 54 இடங்க ளில் முன்னிலை, வெற்றி நிலவரங்களில்  இருப்பதால் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கிறது.

இரவு 8 மணி நிலவரப்படி