states

img

‘அதிகரிக்கும் வேலையின்மை அந்தமான் இளைஞர்களுக்கு அநீதி

இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் அந்தமான் மற்றும் நிக்கோபர் பிரதேச கூட்டம் நீண்ட நாட்களுக்கு பிறகு, கடந்த ஏப்ரல் 8 அன்று அந்த மான் அனார்கலியில் உள்ள ஷாஹீத் பவனில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவரும், நாடாளு மன்ற உறுப்பினருமான ஏ.ஏ.ரஹீம் இணையவழியில் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், “இந்தியாவில் பில்லியனர்களுக்குத் தான் நல்ல நாள் (அச்சே தின்) உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டிருந்தது. ஆனால் நம் நாட்டில் சாதாரண ஏழை-எளிய மக்களின் வாழ்க்கை வாழ்வா, சாவா என்ற போராட்டத்துடன் நகர்ந்து  கொண்டிருக்கிறது. அந்தமான் நிக்கோ பரில் வேலையின்மை அதிகரித்தி ருப்பது கவலையளிக்கிறது.  பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள், இப்பிரதேச இளைஞர்களுக்கு எந்த வொரு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தித் தரவில்லை. அந்தமான் நிக்கோபர் இளைஞர்களின் பிரச்ச னைகள் மற்றும் கோரிக்கைகளுக்காக நான் நிச்சயம் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். வாலிபர் சங்கம் துவங் கப்பட்ட 1980 நவம்பர் 1-லிருந்து, சங்கம் அதன் நோக்கங்களை விளக்கி பல்வேறு போராட்டங்களை நடத்தியி ருக்கிறது. நாட்டில் உள்ள இளை ஞர்களுக்கு சிறந்த வாழ்க்கை கிடைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தமான் நிக்கோபர் பிரதேச செயலா ளர் டி.அய்யப்பன் உரையாற்றுகை யில், “ஒன்றிய அரசு அந்தமான் நிக்கோ பர் இளைஞர்களை முற்றிலும் புறக்க ணித்துள்ளது. இந்த இளைஞர்களின் நலனுக்காக ஒன்றிய அரசு எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இப்பிர தேச அரசு அலுவலகங்களில் 13 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக் கின்றன. அனைவருக்கும் வேலை வழங்கக் கோரி, வாலிபர் சங்கம் அந்த மான் நிக்கோபரில் உள்ள அனைத்து இளைஞர்களையும் ஒன்றிணைத்து மாபெரும் பேரணியை நடத்தும்” என்றார். சிஐடியு மாநில பொதுச் செயலா ளர் பி.சந்திரசூடன், ‘போராட்டம் நடத் தாமல் எதையும் சாதிக்க முடியாது’ என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் பலர், பிரதேச  மற்றும் ஒன்றிய அரசின் அக்கறை யின்மை, தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து விவரித்தனர். 14 பேர் கொண்ட புதிய மாநில  அமைப்பாளர் குழு உருவாக்கப் பட்டது. இதில் தலைவராக ராகுல் தேவ் மிரிதா, செயலாளராக டிஜோ ஜார்ஜ், பொருளாளராக நரேஷ் குமார் மற்றும் துணைத் தலைவராக ரினு ஆண்டனி, இணைச் செயலாளராக த்ருபா மசூம்தார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அந்தமான் நிக்கோபரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற உறுப்பி னர் ரஹீமை வரவேற்க பிரதேசம் முழுவதும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், அவர் இணைய வழியில் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.  புதிய இயக்கங்கள் மற்றும் பணி களை புதிதாக தேர்வு செய்யப்பட்ட குழு முடிவு செய்யும்.  வேலையில்லாத இளைஞர்க ளுக்கு வேலையின்மை உத வித்தொகை வழங்க வேண்டும். அந்த மான் நிக்கோபர் அரசு அலுவலகங்க ளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  முன்னதாக ராகுல் தேவ் மிரிதா வரவேற்றார். டிஜோ ஜார்ஜ் நன்றி கூறினார்.