states

ஐ.நா. மனித வளர்ச்சிக் குறியீட்டில் 132-ஆவது இடத்திற்குப் போன இந்தியா!

புதுதில்லி, செப்.10- ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (United Nations Development Programme - UNDP) வெளி யிட்டுள்ள மனித வளர்ச்சிக் குறியீட்டு (Human Develop ment Index) தரவரிசையில், இந்தியா கடந்த ஆண்டை விட மேலும் மோசமான இடத்திற்கு சென்றுள்ளது. 2019-ஆம் ஆண்டில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 191 நாடுகளில் 0.645 மதிப்பெண்க ளுடன் 131-ஆவது இடத்திலிருந்த இந்தியா, 2021 இல் 0.633 மதிப்பெண்களை பெற்று 132-ஆவது இடத்திற்கு இறங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் மனித வளர்ச்சி குறியீட்டு எண் என்பது உலகளாவிய நாடுகளில் வாழும் மனிதர்களின் ஆயுட்காலம், கல்வி மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றின் அளவீடுகளை உள்ளடக்கியது ஆகும். இது நல்வாழ்வை அளவிடும் ஒரு மேம்பட்ட நிலையான வழிமுறையாகும், குறிப்பாக குழந்தைகளின் நலன் இதில் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படும்.

ஆனால், இந்த குறிகாட்டிகளில்தான் இந்தியா மோசமான தரவரிசையைப் பெற்றுள்ளது. அதாவது, இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 69.7 ஆண்டுகளாக இருந்தது தற்போது 67.2 ஆண்டு கள் குறைந்துள்ளது. அதேபோல இந்தியாவின் எதிர்பார்க்கப்படும் பள்ளிப்படிப்பு ஆண்டுகள் 11.9 ஆண்டுகளாக உள்ள நிலையில், தற்போது பள்ளிப் படிப்பின் சராசரி ஆண்டுகள் 6.7 ஆண்டுகளாக உள்ளது. இந்த சரிவே, கடந்த சில ஆண்டுகளாக மனித வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா மோசமான இடத்தைப் பெற்று வருவதற்குக் காரணம் என்றும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் அமைப்பு தெரிவித்துள்ளது. தரவரிசையில், அண்டை நாடுகளான இலங்கை  (73-ஆவது இடம்), சீனா (79-ஆவது இடம்), வங்கதே சம் (129-ஆவது இடம்), பூடான் (127-ஆவது இடம்) ஆகிய நாடுகளை விடவும் மோசமான முறையில் பின் தங்கியுள்ளது. நேபாளம் (143), மியான்மர் (149), பாகிஸ்தான் (161) ஆகிய நாடுகள் மட்டுமே, இந்தியா வைக் காட்டிலும் பின்தங்கி உள்ளன. 2020 அல்லது 2021-இல் சுமார் 90 சதவிகித  நாடுகள் மனித வளர்ச்சிக் குறியீட்டில் (Human Development Index - HDI) சரிவை பதிவு செய்துள்ளதாகவும் கூறும், ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் “இந்தப் பின்னடை விலிருந்து மீள்வதற்கு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் முதல் பெருந்தொற்று பாதிப்புகளை எதிர் கொள்வதற்கான தயாா்நிலையை உறுதிப்படுத்துதல் வரையிலான திட்டங்களில் முதலீடுகளை அதிக ரிப்பது, காப்பீடு உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்க ளை அறிமுகம் செய்வது, தொழில்நுட்பம், பொருளா தாரம் மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் வகை யில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பது ஆகிய 3 முக்கிய நடவடிக்கைகளில் உலகம் கவனம் செலுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.

;