states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஐ பொதுச்செயலாளர் து.ராஜா

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் பிரதமர் மோடி என்ன பேசினார், என்ன விவாதிக்கப்பட்டது என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை. ஆனால் என்ன விவாதிக்கப்பட்டது, டிரம்ப் என்ன ஒப்புக்கொண்டார் என்பதை பிரதமர் மோடி தெளிவுபடுத்தி தேசத்திற்குச் சொல்லவும், இந்திய மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும் முடியும்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

மணிப்பூரில் ஒரு அரசியலமைப்பு நெருக்கடி நிலவுவதாலேயே அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அவர்களே தேசிய பாதுகாப்புக்கும் எல்லைக் கண்காணிப்புக்கும் உங்களின் அரசுதான் பொறுப்பு. 

திரிணாமுல் எம்.பி., சாகேத் கோகலே

11 வருடங்களாக சந்திக்காத ஊடகங்களை வேறு வழியின்றி பிரதமர் மோடி அமெரிக்காவில் சந்தித்து விட்டார். அவரின் நண்பரான அதானி பற்றி டிரம்ப்பிடம் அவர் பேசினாரா என்ற கேள்வி கேட்கப்பட்டது. திணறிப் போன மோடி,”அது அதானியின் தனிப்பட்ட விஷயம்” எனக் குறிப்பிட்டு, “இரு நாட்டு தலைவர்கள் பேச வேண்டிய விஷயம் அல்ல அது” என காட்டமாக பதிலளித்துள்ளார்.

சமூக உரிமை ஆர்வலர் இரோம் ஷர்மிளா

மணிப்பூர் மாநிலத்தில் அமைதி நிலவ நேர்மையான அரசியல் விருப்பம் தான் தற்போதைய உடனடி தேவை. ஆனால் குடியரசுத் தலைவர் ஆட்சி ஒருபோதும் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களுக்கு நிரந்தரத் தீர்வாகாது.