வாக்குத் திருட்டு : 24 மணி நேரத்தில் 25 லட்சம் பேர் எதிர்ப்பு
2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடா ளுமன்ற தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் “வாக்குத் திருட்டில்” ஈடுபட்டு பாஜக வெற்றி பெற்றதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலை வர் ராகுல் காந்தி கடந்த வாரம் குற்றம் சாட்டி னார். அப்போது கர்நாடக வாக்காளர் பட்டிய லில் முறைகேடு நடைபெற்றதாக சில ஆதா ரங்களையும் ராகுல் காந்தி வெளியிட்டார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் உண்மை என ஊடகங்களும் ஆய்வின் மூலம் ஒப்புக் கொண்டன. தொடர்ந்து ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டத்தில் பங்கேற்று, http://votechori.in/ecdemand சான்றிதழை பதிவிறக்கம் செய்யவும், 9650003420 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கலாம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்த கோரிக்கை விடுத்த 24 மணிநேரத்தில் மட்டும் 15 லட்சம் பேர் ஆதரவு சான்றிதழை பதிவிறக்கம் செய் துள்ளனர். மேலும், 10 லட்சம் பேர் மிஸ்டு கால் மூலம் ஆதரவு அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.