states

img

அணைக்கவியலா பெரு நெருப்பும் அணைந்து போன பட்டாசும் - மதுக்கூர் இராமலிங்கம்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரளா சென்றிருந்தார். ஆனால், போன வேலையை மட்டும் பார்ப்பது அவருக்கு பழக்கமில்லாத ஒன்று. பாஜக-வின் பட்டியலின அணி மாநாட்டில் பங்கேற்றும் பேசியிருக்கிறார் அமித்ஷா.

“ஆர்எஸ்எஸ் பரிவாரத்தை வழி  நடத்தும் மனு அதர்மத்தில் ஒடுக்கப் பட்ட மக்களையும் உழைக்கும் மக்க ளையும் எந்தளவிற்கு இழிவு செய்யப் பட்டிருக்கிறது; சாதிய அடுக்குகள் நியாயப்படுத்தப்பட்டிருக்கிறது என்றெல்லாம் அவர் பேசவில்லை. தாங்கள் ஒன்றிய ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த  பிறகு பட்டியல் பிரிவு மற்றும்  பழங்குடி மக்களுடைய நல்வாழ்விற்  காக என்னவெல்லம் செய்திருக்கி றோம் என்றும் பட்டியலிடவில்லை. இருந்தால் சொல்ல மாட்டாரா? வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கி றார். மாறாக, கம்யூனிஸ்ட்டுகள் மீது  பாய்ந்து குதறி இருக்கிறார். கம்யூ னிஸ்ட் கட்சிகள் ஏழைகள் நலனுக்காக  செயல்படுவதில்லை என்று உளறி யிருக்கிறார் அம்பானி, அதானி  போன்ற அன்றாடங் காய்ச்சிகளுக்காக அனுதினமும் ஓடிஓடி உழைத்துவரும் அமித்ஷா.

கம்யூனிஸ்ட் கட்சிகளை உலகம்  அழித்துவருகிறது என்று அவர் ஆரூ டம் கூறியிருக்கிறார். செங்கொடி இயக் கத்தினால் செழித்து வளர்ந்துள்ள கேரளத்தில் நின்றுகொண்டு இப்படிச் சொல்வதற்கு அவர் கூச்சப்பட்டி ருக்க வேண்டும். கொரோனா கொடுங்  காலத்தில் முதலாளித்துவ முகாம்  கிழிந்து தொங்கியதை உலகம் பார்த்தது. கடைந்தெடுத்த வலதுசாரி களான பாஜகவின் ஆட்சி உட்பட முதலாளித்துவத்தின் கோர முகத்தை உலகம் பார்த்தது. ஆனால், கொரோனா கொடுந்தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றியதில் முன்  நின்றது குறைந்தபட்ச அதிகாரத்து டன் மாநிலத்தை ஆளும் கம்யூ னிஸ்ட்டுகள் தான். கொரோனா தடுப்பூசியைக் கூட  இலவசமாகத் தர மறுத்த  புண்ணிய வாளர்களின் கூட்டத்தைச் சேர்ந்த இவ ரது கட்சி தான் ஏழைகளுக்காக பாடுபடு கிறதாம். இன்றைக்கும் கூட கம்யூனிசத் திற்கு மாற்று மருந்தை உலகம் கண்ட றியவில்லை. அவனி எங்கும் நடை பெறும் போராட்டங்கள் அதைத் தான்  உணர்த்துகின்றன.

முன்னதாக, தன்னுடைய சமூக  ஊடகப் பக்கத்தில் கேரளத்தின் உயர்ந்த பண்பாட்டையும் பாரம்பரி யத்தையும் புகழ்ந்துரைத்துள்ளதோடு ஒவ்வொரு இந்தியரும் கேரளத்தை நினைத்துப் பெருமை கொள்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார் அமித்ஷா. ஓணம் பண்டிகை பன்முகப் பண பாட்டைப் பறைசாற்றுகிறது என்றும் புகழ்ந்துரைத்துள்ளார். ஆனால், கேரளத்திற்கு எதிர்காலம் உள்ளது என்றால் அது பாஜக-வால்  தான் என்று ஒரு பெரும் போடாகப் போட்டிருக்கிறார்.  1957-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலிலேயே கம்யூ னிஸ்ட் கட்சி கேரளத்தில் ஆட்சியைப் பிடித்தது. இன்று வரை இடையிடையே காங்கிரஸ் வெற்றி பெற்றபோதும் அதிகமான காலம் கம்யூனிஸ்ட்டு களே கேரளத்தில் ஆட்சி அமைத்தி ருக்கிறார்கள். அதனால் தான் கேர ளத்தின் பண்பாடும் பாரம்பரியமும் நல்லிணக்கமும் வளர்ச்சியும் கம்பீர மாக முன்னெடுத்துச் செல்லப்படு கிறது. ஓணம் பண்டிகை உணர்த்தும்  பன்முக பண்பாட்டைப் பாதுகாத்து  நிற்பது கேரளத்தில் கம்யூனிஸ்ட்டு களே. 

கேரளத்திற்கு நிகரான ஒரு நல்லி ணக்க மாநிலமாக பாஜக ஆளும் ஒரு  மாநிலத்தையாவது குறிப்பிட முடி யுமா?  கம்யூனிஸ்ட்டுகளின் கேரளம்  அத்தப் பூ கோலமிட்டு அழகு சேர்க்கி றது. பாஜக ஆளும் உத்தரப்பிர தேசமோ புல்டோசர் ஆட்சி நடத்து கிறது.  கம்யூனிஸ்ட்டுகளின் கேரளம் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு என  அனைத்திலும் முன் நிற்கிறது. பாஜக  ஆளும் குஜராத்தோ, பில்கிஸ் பானு-க்களின் கண்ணீரில் மிதக்கிறது. அம்பானி, அதானி போன்ற கார்ப்ப ரேட்களுக்கு கரசேவை செய்து கொண்டிருக்கும் பாஜக-வினர்  ஏழைகளின் கட்சியான கம்யூனிஸ்ட்டு களைப் பற்றிப் பேசுவதற்கு அருகதை யற்றவர்கள்.

கேரளத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு இருந்த ஒரு இடத்தையும் துடைத்தெறிவோம் என சபதமிட்டு கம்யூனிஸ்ட்டுகள் நிறை வேற்றியும் காட்டினார்கள். அப்ப டிப்பட்ட கேரளத்தில் பூஜ்ஜியத்திற் குள்ளே ராஜ்ஜியத்தை நடத்திக் கொண்டு அமித்ஷா அளந்து விடு கிறார். அமித்ஷா தில்லி போய் இறங்கு வதற்குள் கேரள முதல்வர் பினராயி  விஜயன், சரியான பதிலடி கொடுத்தி ருக்கிறார்: “அமித்ஷா ஒரு அணைந்து போன பட்டாசு. எந்தவொரு அச்சு றுத்தலுக்கும் கேரள மக்கள் அடி பணிய மாட்டார்கள்”.

;