states

img

மூன்று இலக்கத்தை தொட்டது ஒமைக்ரான் அச்சமூட்டும் தகவலைக் கூறுகிறார் டாக்டர் வி.கே.பால்

புதுதில்லி, டிச.18- இந்தியாவில் இதுவரை 113 பேருக்கு  ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 11  மாநிலங் களில் ஒமைக்ரான் பரவி உள்ளது. கர்நாடகாவில்   ஐந்து பேருக்கு  ஓமைக்ரான் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து திரும்பிய 19 வயது ஆண், தில்லியில் இருந்து திரும்பிய 36 வயது ஆண், 70  வயது பெண், நைஜீரியாவில் இருந்து  திரும்பிய 52 வயது ஆண், தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய 33 வயது ஆண்  ஆகி யோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளது.  ந்தத் தகவலை மாநில சுகாதாரத்துறை சுதாகர் உறுதிப் படுத்தியுள்ளார். மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலான ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது. இங்கு 40 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இராஜஸ் தான்-17,  கர்நாடகா-8, குஜராத்-5, கேரளம்-7, தெலுங்கானா-8, தமிழ்நாடு- 1, மேற்கு வங்கம்-1,  ஆந்திரம்-1, தில்லி-22, சண்டிகர்-1. ஐசிஎம்ஆர் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பல்ராம்  பார்கவா, நாட்டில் ஓமைக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்து வருவதாகக் கூறி தமது கவலையை வெளிப்படுத்தினார்.  அத்தியாவசியமற்ற பயணம் மற்றும் கூட்டங்களைத் தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். நிதி ஆயோக் (சுகாதாரத்து றை) உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் கூறுகையில், இங்கிலாந்தில் கொரோனா பரவும் அளவை பார்க்கும்  போது, அதே அளவில்  இந்தியாவில் பரவினால் நமது மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது நாட்டில் தினமும் 14 லட்சம்  பேருக்கு  கொரோனா பாதிப்பு  ஏற்படலாம். தற்போது நிலவி வரும்  அனைத்து சூழ்நிலைகளையும்  அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது’ என்றார்.

;