states

சட்டவிரோத சுரங்க வழக்கு ஜார்க்கண்ட் முதல்வருக்கு அமலாக்கத்துறை சம்மன்

ராஞ்சி, நவ.2-  ஜார்க்கண்ட் சட்டவிரோத சுரங்க வழக்கில் பணமோசடி தொடர்பாக வியாழ னன்று (நவம்பர் 3) விசாரணைக்கு ஆஜராகும் படி அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது. மாநிலத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்ட அனுமதி வழங்கியது தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஹேமந்த் சோரனிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.  நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக ஹேமந்த் சோரன் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா உள்ளிட்ட 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். பங்கஜ் மிஸ்ரா வீட்டில் ஹேமந்த்  சோரன் கையெழுத்திட்ட காசோலைகள் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகம் கைப்பற்ற ப்பட்டுள்ளதால், முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சுரங்க குத்தகை குற்றச்சாட்டு தொடர்பாக, ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை தகுதி நீக்கம்  செய்ய தேர்தல் ஆணையம், அம்மாநில ஆளுநர் ரமேஷ் பயாஸ்-க்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.