states

img

நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும்... விமர்சனங்களுக்கு அரசாங்கம் எவ்வாறு பதிலளிக்கிறது என்பதே முக்கியம்!

புதுதில்லி, செப்.5- சட்டத்தின் ஆட்சி மற்றும் விமர்சகர்களுக்கு அரசாங்கம் எவ்வாறு பதிலளிக்கிறது என்பது குறித்த கவலையைத்தான் தனது பேட்டியில் வெளிப்படுத்தி இருந்ததாக ஓய்வுபெற்ற உச்ச  நீதிமன்ற நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா தெரி வித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 2001-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா  சபர்வால் ஆவார். மக்களின் அதிகாரி என்று  பெயரெடுத்த இவர், அண்மையில் பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்  பந்தப்பட்ட 11 குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட்டது குறித்து அதிர்ச்சி வெளியிட்டி ருந்தார். “பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளின் விடுதலையை கேள்விப்பட்டதும் ஒரு பெண்  ணாகவும், அரசு ஊழியராகவும், நம்பிக்கை யின்றி இருக்கிறேன். அச்சமின்றி சுதந்திர மாக சுவாசிக்கும் பில்கிஸ் பானுவின் உரிமை யை நாம் மீண்டும் கொடுக்க முடியாது, இதற்கி டையேதான் நம்மை ஒரு சுதந்திர தேசம் என்று  நாம் அழைத்துக் கொள்கிறோம்” என்று அவர்  வேதனை தெரிவித்திருந்தார்.

இதனிடையே, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா ‘தி இந்து’ நாளித ழுக்கு அளித்த பேட்டியில், ஐஏஎஸ் அதிகாரி  ஸ்மிதா சபர்வாலின் கருத்து குறித்து கேள்வி  எழுப்பப்பட்டது. அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் தங்க ளின் கருத்தை வெளிப்படுத்த உரிமையுண்டா?  அது சரிதானா? என்று கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா, “ஒருவர் அரசுப் பணியில் சேரும் போது, சில ஒழுங்கு விதிகள் இருக்கின்றன. எனினும், “ஐஏஎஸ் அதிகாரிகள் நியாயமான மற்றும் கண்ணியமான முறையில் தங்களை வெளிப்படுத்த உரிமை உண்டு” என்றார். அதற்கு இரண்டு உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை யும் எடுத்துக் காட்டினார். அதுமட்டுமல்லாமல், “பில்கிஸ் பானு வழக்கில் கும்பல் வல்லுறவு மற்றும் கொலை  வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரின் விடு தலை தனக்கும் அதிர்ச்சி அளித்தது” என்றார். ”ஜனநாயகத்தில், அரசாங்கத்தை விமர் சிக்கும் உரிமை ஒரு அடிப்படை உரிமை, அதை  யாரும் மூடிமறைக்க முடியாது” என்ற நீதிபதி  ஸ்ரீகிருஷ்ணா, ஆனால், “இன்று, விஷயங்கள் மிகவும் மோசமாக உள்ளன. இதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். நான் ஒரு பொது  சதுக்கத்தில் நின்று பிரதமரின் முகம் எனக்குப்  பிடிக்கவில்லை என்று சொன்னால், யாரேனும்  என்னைத் தாக்கலாம், கைது செய்யலாம், எந்த  காரணமும் சொல்லாமல் சிறையில் தள்ள லாம்” என்று தனது ஆதங்கத்தையும் வெளிப்  படுத்தினார்.

நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணாவின் இந்த  கருத்தை வரவேற்ற எதிர்க்கட்சித் தலை வர்கள், நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா உண்மையையே எதிரொலித்திருப்பதாக குறிப்பிட்டனர். உடனே இவ்விவாதத்தில் குதித்த ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிர தமரை துஷ்பிரயோகம் செய்ய எந்த தடையும் இல்லாமல் எப்போதும் பேசுபவர்கள் கருத்து  சுதந்திரம் பற்றி அழுகிறார்கள். காங்கிரஸ் கட்சி யால் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சி பற்றி அவர்கள் ஒருபோதும் பேச மாட்டார்கள்; சில  பிராந்திய கட்சி முதல்வர்களை விமர்சிக்கவும் துணிய மாட்டார்கள்” என்றதுடன், “உச்சநீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி இதை உண்மை யில் கூறியிருக்கிறாரா என்று எனக்குத் தெரிய வில்லை. அது உண்மையாக இருந்தால், அவர்  பணியாற்றிய நிறுவனத்தையே அது இழிவு படுத்துவதாகும்” என்று கூறினார். இதையடுத்து, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, தனது  பேட்டி குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், “அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை  உரிமையான பேச்சு சுதந்திரத்தைப் பயன்  படுத்துவதைப் பற்றியே நான் பேசினேன்.  குடிமை பணி அதிகாரிகளின் விமர்சனம்  கண்ணியமான முறையில் செய்யப்படும் வரை, அது அவர்களின் சேவை விதிகளின் வழியில் குறுக்கிடக் கூடாது. மேலும், எனது கவலையா னது சட்டத்தின் ஆட்சி மற்றும் விமர்சகர் களுக்கு அரசாங்கம் எவ்வாறு பதிலளிக்கிறது என்பதைப் பற்றியதே ஆகும்” என்று குறிப் பிட்டுள்ளார்.

;