புதுதில்லி, டிச.20- எஸ்எப்ஐயின் அகில இந்திய குழுவின் ஒருங்கிணைப்பா ளராக திப்சிதா தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 28 பேர் கொண்ட துணைக் குழுவும் அமைக்கப்பட்டது. சங்கீதா தாஸ், ஐஸ்வர்யா மற்றும் நபோனிதா சக்ரபர்த்தி ஆகியோர் இணை அழைப்பாளர்களாக உள்ளனர். துணைக் குழுவில் கேர ளாவைச் சேர்ந்த பாத்திமா சுல்தானா, அனகா பவித்ரன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் நடந்த மாநாட்டில் தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கவும், குழந்தை திருமணம் மற்றும் வரதட்சணை போன்ற சமூக அவலங் களை தடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிறைவாக நடந்த கலாச்சார மாலையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாண வர்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். சிகார் நகரில் ஆயிரக்கணக்கான மாணவிகள் பங்கேற்ற மாபெரும் பேரணியுடன் மாநாடு தொடங்கியது. மாநாட்டில், எஸ்எப்ஐ மத்தியக்குழுவின், கோவிட் காலத்தில் கல்வித் துறையின் சோகம் என்ற நூலை முன்னாள் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா வெளியிட்டார்.