states

img

ஒருவழியாக ‘ஏர் இந்தியா’வை சூறையாடியது மோடி அரசு

புதுதில்லி, ஜன.29- ‘ஏர் இந்தியா’வை, டாடா குழு மத்திடம், ஒன்றிய அரசு வியாழ னன்று அதிகாரப்பூர்வமாக ஒப்ப டைத்தது. அதாவது நாட்டின் பெரு மைமிக்க ஒரு பொதுத்துறை நிறுவ னத்தை வெறும் 18 ஆயிரம் கோடிக்கு அடிமாட்டு விலைக்கு விற்று கதை யை முடித்துள்ளது. ‘‘ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விலக்கிக் கொள்ளும் நட வடிக்கைகள் வியாழக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்தன. அந்நிறுவனத்தின் 100 சதவீதப் பங்குகளும் நிர்வாகப் பொறுப்பும் டாலேஸ் நிறுவனத்திடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளன. டாலேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த புதிய நிர்வாக வாரியம் ‘ஏர் இந்தியா’வின் செயல்பாடுகளை நிர்வகிக்க தொடங்கியுள்ளது’’ என்று மத்திய முதலீடு மற்றும் பொதுச் சொத்துகள் மேலாண்மைத் துறை (டிஐபிஏஎம்) செயலா் துகின்காந்த பாண்டே டுவிட்டரில் மகிழ்ச்சியைக் கொண் டாடியுள்ளார்.

“ஏர் இந்தியாவின் பங்குகளை விலக்கிக் கொள்ளும் பணி உரிய காலத்துக்குள் வெற்றிகரமாக முடி வடைந்தது. இந்த நிகழ்வு, ஒன்றிய அரசின் திறனையும், எதிர்காலத்தில் பங்கு விலக்கலை திறம்பட நிறை வேற்றுவதன் உறுதிப்பாட்டையும் உணர்த்துகிறது. புதிய உரிமையா ளர்களுக்கு வாழ்த்துகள். அவர் களது நிர்வாகத்தில் ‘ஏர் இந்தியா’ செழித்து வளரும்” என்று ஒன்றிய அரசின் சிவில் விமான போக்கு வரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவும் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வாழ்த்து தெரி வித்துள்ளார். ‘ஏர் இந்தியா’வைத் தங்களுக்கு விற்றதற்காக பிரதமர் மோடியைச் சந்தித்து நன்றி தெரிவித்துவிட்டு வந்த டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன், ‘‘ஏர் இந்தியாவை ஒன்றிய அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டோம்.

இந்த ஒப்பந்தம் நிறை வடைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடை கிறோம்” என்று அறிவித்துள்ளார். ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் 141 விமானங்களும், ‘ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்’, ‘ஏா் இந்தியா எஸ்ஏ டிஎஸ்’ சேவை வழங்கல் நிறுவனத் தின் 50 சதவிகித பங்குகள் என மொத்தமும் ரூ.18 ஆயிரம் கோடிக்கு கிடைக்கிறது என்றால், டாடா சன்ஸ் மகிழாமல் எப்படி இருக்கும்?  கூடவே, மக்கள் சொத்தை விற்று, தங்களின் முதலாளி விசுவா சத்தைக் காட்டியதற்காகவோ என் னவோ, மோடி அரசும் கொண்டாட் டம் போடுகிறது. காரணம் கேட்டால், ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தால் நாளொன் றுக்கு ரூ. 20 கோடி இழப்பு ஏற்பட்டு வந்தது. தற்போது அதனை வெற்றி கரமாக தனியாருக்கு விற்று இழப்பை தடுத்து விட்டோம் என்று கூறுகிறது. ஆனால், கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையைப் போல, மக்க ளின் வரிப்பணத்தை எடுத்து முத லாளிகளுக்கு பந்தி வைத்த வேலை யையே மோடி அரசு செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ‘ஏர் இந்தியா’ சுமார் ரூ. 70 ஆயி ரம் கோடி கடனில் தவித்தது என்றால், அந்தக் கடனோடு சேர்த்து நிறு வனத்தை விற்றிருந்தால் கூட பர வாயில்லை. அவ்வாறு செய்யாமல் ரூ. 18 ஆயிரம் கோடிக்குத்தான் ‘ஏர் இந்தியா’ விற்கப்பட்டுள்ளது. மீதி யுள்ள சுமார் ரூ. 50 ஆயிரம் கோடி கட னுக்கு  வழக்கம்போல இந்திய மக்க ளையே மோடி அரசு பொறுப்பாளி யாக்கி இருக்கிறது.  

நடப்பு 2021-22 ஆம் நிதியாண் டில் ரூ. 3 லட்சத்து 73 லட்சம் கோடிக் கான கூடுதல் மானியம் கோரும் மசோதாவை கடந்த நவம்பர் மாதம் மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய் தார். இதில், ‘ஏர் இந்தியா’ கடன் களை அடைப்பதற்காக என்று அவர் கேட்ட தொகை மட்டும் ரூ.  62 ஆயிரத்து 57 கோடி. அதற்கு ஒப்பு தலும் வழங்கப்பட்டுள்ளது. இதிலி ருந்துதான் தற்போது ‘ஏர் இந்தியா’ வின் கடன் அடைக்கப்பட உள் ளது.  இவ்வாறு இருக்கையில் ‘ஏர் இந்தியா’வை விற்றதால் நாட்டிற்கு என்ன லாபம்? ‘ஏர் இந்தியா’ கடன் களுக்கு 62 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்க முடியும்போது, கூடுதலாக 18 ஆயிரம் கோடி ஒதுக்கி ‘ஏர் இந்தியா’வை அரசே நடத்தியிருக்க முடியாதா? என்று அண்மையில் கேள்வி எழுந்தது.

‘ஏர் இந்தியா’வை எப்படியாவது தனியார்மயமாக்கு வதுதான் மோடி அரசின் உண்மை யான நோக்கமே தவிர, கடன்கள் ஒரு காரணமல்ல என்பதும் அப்போதே அம்பலமானது. ரூ. 18 ஆயிரம் கோடி ‘டாடா சன்ஸ்’ நிறுவனத்திடம் இருந்து வரு கிறது என்று மோடி அரசு கூறு கிறது. இதிலாவது உண்மை இருக்கி றதா? என்றால், வெறும் ரூ. 2 ஆயி ரத்து 700 கோடியைத்தான் ரொக்க மாக ஒன்றிய அரசுக்கு ‘டாடா சன்ஸ்’ வழங்கியிருக்கிறது. மீதியுள்ள சுமார் 15 ஆயிரத்து 300 கோடி ரூபாயை, கடன்களுக்கு பொறுப்பு என்ற வகையில் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த 15 ஆயிரத்து 300 கோடி யை தன்கையில் இருந்து தரப் போகிறதா என்றால், ‘ஏர் இந்தியா’ வை கையகப்படுத்துவதற்கு தேவை யான 18 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் ஆரம்ப இயக்க செலவு களுக்கான 5 ஆயிரம் கோடி ரூபாய் என மொத்தம் 23 ஆயிரம் கோடி ரூபாயை நாட்டின் பொதுத்துறை வங்கிகளிடம் கடனாக கேட்டுள் ளது. இதில், பஞ்சாப் நேஷனல் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் 3 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து, 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை 4.25 சதவிகித வட்டி யில் டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு கடன் வழங்க ஒப்புக் கொண்டி ருப்பதாகவும் தகவல்கள் வெளி யாகியுள்ளன. அதாவது, இந்திய பொதுத் துறை வங்கிகளின் பணத்தை வைத்தே, இந்தியாவின் பெருமை மிக்க மற்றொரு பொதுத்துறை நிறுவனமான ‘ஏர் இந்தியா’வை ‘டாடா சன்ஸ்’ சாமர்த்தியமாக கையகப்படுத்தியுள்ளது. அதற்கு மோடி அரசு வெட்கமே இல்லாமல் துணைபோயிருக்கிறது.