states

img

‘பாரத் கவுரவ்’ என்ற பெயரில் 190 ரயில்கள் தனியார்மயம்..!

வருகிறது. பிஎஸ்என்எல் (BSNL), எம்டி என்எல் (MTNL) நிறுவனங்களை நஷ் டத்தில் இருந்து மீட்டெடுக்கிறோம் என்ற பெயரில், அவற்றின் சொத்துக் களை ரூ. 70 ஆயிரம் கோடிக்கு விற் கும் வேலைகளையும் துவங்கியுள் ளது. டிசம்பர் 14-ஆம் தேதி ரூ. 37 ஆயிரம் கோடிக்கான முதற்கட்ட ஏலத்தை அறிவித்துள்ளது. முன்னதாக இரண்டு ஆண்டு களுக்கு முன்பே, நாடு முழுதும் 109 வழித்தடங்களில் 151 ரயில்களைத் தனியார்மயமாக்க ஒன்றிய அரசு தீர்மானித்தது. சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, மும்பை, தில்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், ஹைதராபாத், பெங்களூரு உள் ளிட்ட நகரங்களுக்கு இயக்கப் படும் 12 ரயில்கள், கன்னியாகுமரி யிலிருந்து எர்ணாகுளத்திற்கு இயக்கப்படும் ரயில் ஆகிய 13 ரயில் களைத் தனியார்மயமாக்குவதற் கான ஒப்பந்தப் புள்ளிகளும் இதில் அடங்கும். 

ஆனால், தில்லி மற்றும் மும்பை யில் சில ரயில்களை மட்டும் இயக்க ஐஆர்சிடிசி எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் முன்வந்தது. ஆனால், 95 சத விகிதத்திற்கும் அதிகமான ரயில் களை ஏலம் எடுக்க எந்த தனியார் நிறு வனமும் முன்வரவில்லை. இதனால் அந்த திட்டம் தோல்வியில் முடிந் தது. இந்நிலையில்தான், ‘பாரத் கவு ரவ்’ என்ற புதிய பெயரில் 190 ரயில் களை தனியார்மயமாக்கும் திட் டத்தை ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள் ளார்.  இதுதொடர்பாக செய்தியாளர் களுக்கு அளித்திருக்கும் பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: பயணிகள், சரக்கு ரயில்களுக்கு அடுத்தபடியாக சுற்றுலாத் துறை யில் ‘பாரத் கவுரவ் ரயில்கள்’ இயக் கப்படும். இந்தியாவின் கலாச்சார, பாரம்பரியத்தை பறைசாற்றும் இந்த ரயில்கள், இந்திய ரயில்வே கேட்ட ரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) மட்டுமன்றி, தனியாராலும் நிர்வகிக் கப்படும். இதற்கான விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன. குத் தகை அடிப்படையில் ரயில் சேவை களை தனியார் மேற்கொள்ளலாம். இந்த ரயில்கள் வழக்கமான ரயில்க ளைப் போல கால அட்டவணைப்படி இயங்க மாட்டா.

‘பாரத் கவுரவ்’ ரயில்களுக்காக, 3,033 ரயில் பெட்டிகள் அல்லது 190 ரயில்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். தற்போதைய நில வரப்படி, ‘பாரத் கவுரவ்’ திட்டத்துக் காக ஐசிஎப் ரயில் பெட்டிகள் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளன. வருங் காலத்தில் தேவையின் அடிப்படை யில் வந்தே பாரத், விஸ்டா டோம், எல்எச்பி பெட்டிகளும் பயன்படுத்தப் படும்.  தனிநபர், அறக்கட்டளைகள், கூட்டமைப்பு, சுற்றுலா ஏற்பாட்டா ளர்கள், மாநில அரசுகள் கூட ‘பாரத் கவுரவ்’ ரயில் திட்டத்தை செயல் படுத்த விண்ணப்பிக்கலாம். (குத்த கைதாரர்கள் ஆன்லைனில் ரூ.1 லட் சம் பதிவுக் கட்டணம் செலுத்தி ரயில் சேவை ஏலத்திற்கு விண்ணப்பிக்க லாம். ரேக்கிற்கு தலா ரூ.1 கோடி வைப்புத் தொகையாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதை 2 முதல் 10 ஆண்டு கள் வரை பயன்படுத்திக் கொள்ள லாம்.) பாரம்பரியத்தை பறைசாற்றும் கருப்பொருளை மையமாகக் கொண்டு சிறப்பு சுற்றுலா சுற்றின் அடிப்படையில் ரயில்கள் இயக்கப் பட வேண்டும். ஏற்கெனவே இந்த ரயில்களை இயக்குவதற்கு தமிழ கம், கர்நாடகம், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் ஆர்வம் தெரி வித்துள்ளன.

ரயில் பயணம் மட்டுமன்றி ஹோட் டலில் தங்கும் வசதி, வரலாற்றுச் சிறப்பு மிக்க பாரம்பரிய இடங்களை பார்வைவையிட ஏற்பாடு, பயண வழிகாட்டி உள்ளிட்ட உள்ளார்ந்த சேவைகள் அனைத்தையும் சுற் றுலா பயணிகளுக்கு ‘பாரத் கவு ரவ்’ ரயில் சேவை வழங்கும். பயணி கள் பெறும் சேவைகளின் அடிப்படை யில் கட்டணம் நிர்ணயிக்கப்படும். நடைமுறையில் ‘பாரத் கவுரவ்’ ரயில் கட்டணம் சுற்றுலா ஏற்பாட்டா ளர்களால் நிர்ணயிக்கப்பட்டாலும், அதில் அசாதாரண சூழல் நிலவா ததை ரயில்வே உறுதிப்படுத்தும். குத்தகைதாரா்கள் ரயில் பெட்டி களை மேம்படுத்தியும் இயக்கலாம். ரயில் பெட்டிகளின் உள்புற வடிவ மைப்புகளை மாற்றிக் கொள்ள சேவை நிறுவனங்களுக்கு சுதந்திரம் அளிக்கப்படும். ரயிலில் கார்டு பெட்டி யுடன் சோ்த்து 14 முதல் 20 பெட்டி கள் வரை இருக்கும்.  இந்த ரயில் திட்ட யோசனை பிர தமர் மோடிக்குதான் முதலில் தோன் றியது. இந்த ரயிலின் மூலம் ‘இந்தியாவின் பாரம்பரியத்தை பொதுமக்கள் புரிந்துகொண்டு, பெருமிதத்துடன் அடுத்தகட்டத் துக்கு முன்னெடுத்துச் செல்வர்’ என அவர் கருதுகிறார். இவ்வாறு ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள் ளார். நாடு முழுவதும் தற்போது 67 ஆயி ரத்து 956 கி.மீ. தொலைவுக்கு ரயில் சேவை உள்ளது. இதில் பயணியர் போக்குவரத்து பிரிவில் 13 ஆயி ரத்து 169 ரயில்களும், சரக்கு போக்கு வரத்து பிரிவில் 8,479 ரயில்களும் இயக்கப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 2.3 கோடி மக்கள் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். 30 லட்சம் டன் சரக்கு போக்குவரத்து நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

;