https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury
கூட்டுக் களவாணி என்பது....
1. அதானி குழுமம், ஆஸ்திரேலியாவில் உள்ள தனது சுரங்கத்திலிருந்து இந்தியாவிற்குள் நிலக்கரி இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.
2. ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் நிலக்கரிக்கு இறக்குமதி வரியை 2.5 சதவீதத்தில் இருந்து ஜீரோ சதவீதமாக குறைத்து மோடி அரசு உடனடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
3. 1.2 கோடி டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய தயாராக இருக்குமாறு இந்திய நிலக்கரி நிறுவனத்துக்கு மோடி அரசாங்கம் அறிவுறுத்தல்.
4. தேசிய அனல்மின் கழகம் (NTPC) எனும் பொதுத் துறை நிறுவனம், அதானி குழுமத்துடன் ரூ.8308 கோடி நிலக்கரி இறக்குமதி செய்ய ஒப்பந்தம். காவி- கார்ப்பரேட் கூட்டு களவாணித்தனம் என்பது புரிகிறதா?
எவ்வளவு கருப்புப் பணம்?
14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுவிஸ் வங்கிகளில் 2020 இல் ரூ.20,700 கோடியாக இருந்த இந்தியர்களின் பணம் 2021 இல் ரூ.30,500ஆக உயர்வு. சேமிப்புகளும் டெபாசிட்டுகளும் 7 ஆண்டுகளில் அதிகபட்சமாக உயர்வு. இதில் எவ்வளவு கருப்பு பணம்?
2014 இல் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்றார் மோடி! பொய் பிரச்சாரம் அது! உண்மை நிலை இது!