புதுதில்லி, ஜூலை 3- மணிப்பூரில் நீடிக்கும் இனக்கல வரம் தொடர்பாக, ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, ஒன் றிய அரசுக்கு, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. “மணிப்பூர் நிலைமை குறித்த அனைத்து தகவல்களும் அடங்கிய புதிய அறிக்கையை ஒரு வாரத்திற் குள் தாக்கல் செய்ய வேண்டும்; அந்த அறிக்கை அடிப்படையில் தான், வழக்கை விசாரிக்க முடியும்” என்று கூறியிருக்கும் நீதிபதிகள், வழக்கை ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். மணிப்பூரில் அமைதி திரும்ப வும், வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர ஒன்றிய அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கக் கோரியும், உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக் கள் தாக்கல் செய்யப்பட்டன.
திங்களன்று (ஜூலை 3) இந்த மனுக்கள், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வில் மீண்டும் விசா ரணைக்கு வந்தன. அப்போது, மணிப்பூர் மாநில நிலைமை கொஞ் சம் கொஞ்சமாக சீரடைந்து வருவ தாகவும், ஊரடங்கு நேரம் குறைக் கப்பட்டு வருவதாகவும் ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். மேலும், நிலைமையை முழு வதும் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினருடன் மணிப்பூர் ரைபிள் படையினர், மத்திய ஆயுதப் படையினர், 114 ராணுவ கமாண் டோக்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டு உள்ளதாகவும், 153 நிவா ரண முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாக்கப்படுவ தாகவும் கூறினார். இவற்றை கேட்டுக் கொண்ட நீதி பதிகள், மணிப்பூர் வன்முறை குறித்து விரிவான அறிக்கையை ஒரு வாரத் தில் தாக்கல் செய்யுமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டனர். கல வரத்தை தடுக்க எடுக்கப்பட்ட நட வடிக்கைகள், மறுவாழ்வு நடவடிக் கைகள், சட்டம் - ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது; கைது நடவடிக்கை என்ன; எவ்வளவு ஆயுதங்கள் பறி முதல் செய்யப்பட்டிருக்கின்றன; எத் தனை நிவாரண முகாம்கள் அமைக் கப்பட்டு உள்ளது; இயல்பு நிலை திரும்ப என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அனைத்து தகவல்களையும் கொண்டதாக அந்த அறிக்கை இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ள நீதிபதி கள், அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத் துள்ளனர்.