states

img

ஜம்மு-காஷ்மீர்- லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை உடனடியாக நீக்குக!

புதுதில்லி, டிச.17- ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்திய கூட்டம் ஒன்றில் பங்கேற்று, அரச மைப்புச்சட்டத்திற்கு விரோதமாக  ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஸ் மித்தால் பேசியிருக்கிறார் என்றும் அவர் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் குடியரசுத் தலை வருக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தால் தான் வகிக்கும் பொறுப்புக்காக தான் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை மீறும் விதத்தில் மிகவும் மோசமான முறை யில் நடந்துகொண்டிருக்கிறார்.  

பங்கஜ் மித்தால், 2021 டிசம்பர் 5 அன்று ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஓர் அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொண்டு, அரச மைப்புச்சட்டத்திற்கு எதிராகப் பேசி யிருக்கிறார். பங்கஜ் மித்தால், அகில பாரதிய அதிவக்தா பரிசத் என்னும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டு, “அரசமைப்புச்சட்டத்தின் முகப்புரையில் மதச்சார்பின்மை மற்றும் சோசலிஸ்ட் போன்ற வாச கங்கள் சேர்க்கப்பட்டிருப்பது, இந்தி யாவின்  ஆன்மீக சித்திரத்தைச் சுருக்கி விட்டது,” என்று பேசியிருக்கிறார். மேலும் அவர், “சில சமயங்களில் நம் பிடிவாதத்தின் காரணமாக இதற்கு திருத்தங்கள் கொண்டுவந்திருக்கி றோம்,” என்றும் பேசியிருக்கிறார். இவ்வாறு அவர் பேசிய வாச கங்கள் ஊடகங்களில் வெளியாகி யிருக்கின்றன.

நாட்டின் அரசமைப்புச்சட்டத்திற்கு எதிராக ஓர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே இவ்வாறு வாசகங்களை உதிர்த்திருப்பது, அதுவும், ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தைப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் அமைப்பின் மேடையில் உதிர்த்திருப்பது, அவர் தான் மேற்கொள்வதாக உறுதி மொழி எடுத்துக்கொண்டு செயல்படும் நடவடிக்கைகளை மீறும் செயலா கும். பங்கஜ் மித்தாலின் நடவடிக்கை அரசமைப்புச்சட்டத்தின் கீழ் இயங்கும் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருப்பவருக்கு முற்றிலும் பொருத்தமற்ற நடத்தையாகும். அரசமைப்புச்சட்டத்தின் காவலர் என்ற முறையில், தாங்கள் மேற்படி பங்கஜ் மித்தாலை நியமனம் செய்த வர் என்ற முறையில், அவரை அப்பதவி யிலிருந்து நீக்குவதற்கு உரிய நடவ டிக்கைகளை உடனடியாக எடுத்திட வேண்டும்.  அதன்மூலம் நம் அரசமைப் புச்சட்டத்தின் புனிதத்தையும், நீதித் துறையின் சுதந்திரத்தையும் உயர்த்திப்பிடித்திட வேண்டும்.    இவ்வாறு அக்கடிதத்தில் கோரியுள்ளார்.  இக்கடிதத்தின் நகலை, உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி. ரமணாவிற்கும் அனுப்பியுள்ளார்.                (ந.நி.) 

;