அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் இஸ்ரேலியப் படைகள் பாலஸ்தீனர்கள் மீது ஏவியுள்ள இனப்படுகொலையை உடனே நிறுத்தக் கோரி இடதுசாரி கட்சிகளின் மாநாடு செவ்வாயன்று தில்லியில் உள்ள ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பவனில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக நவம்பர் 7 முதல் 10 வரை நாடு தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதர் அபு அல் ஹிஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் து.ராஜா மற்றும் இடதுசாரி தலைவர்கள் உரையாற்றினர்.