states

இன்று சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி

மதத்தின் அடிப்படையில் பகைமை யை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை இங்கு ஒருபோதும் அனுமதிக்கமாட் டோம் என்று மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளவும், சமூக நல்லி ணக்கத்தைப் பாதுகாக்கவும் 11.10.2022 அன்று சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் நடைபெற விருக்கும்  இம்மனிதச் சங்கிலிப் போராட்டம் புதிய வரலாறு படைக்க உள்ளது. தற்போது வரை கிடைத்துள்ள தகவல்படி பல லட்சம் பேர் மனிதச் சங்கி லியில் பங்கேற்கவுள்ளனர். ஒவ்வொரு  மாவட்டத்திலும் எந்தெந்த இடங்களில் பங்கேற்க வேண்டும் என்பது குறித்து  கூட்டாகக் கலந்து பேசி முடிவெடுக்கப் பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடங்கி இன்னொரு குறிப்பிட்ட இடம்  வரையில் அனைத்துக் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சார்ந்த தோழர்கள் கை களைக் கோர்த்து நிற்க வேண்டுகிறோம். சென்னையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ள மாவட்டங்களைச் சார்ந்த அனைத்துக் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சார்ந்த தோழர்கள் யாவரும்  மனிதச் சங்கிலியில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு அருகில் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் மாநிலத் தலை வர்கள் கரம்கோர்த்து நிற்பார்கள்.

இதனைத் தொடர்ந்து சாந்தி தியேட்டர் வரை வடசென்னை மாவட்டத்திற்கு உள்ளிட்ட தோழர்கள் சங்கிலியாக அணிதிரள வேண்டும். சாந்தி தியேட்டர் முதல் எல்ஐசி வரை மத்திய சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சங்கிலியாக அணிதிரள வேண்டும். எல்ஐசி முதல் ஆயிரம் விளக்கு மசூதி வரை தென்சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சங்கிலியாக அணிதிரள வேண்டும். தோழர்கள் ஒரே இடத்தில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படாமல் மனித சங்கிலி இயக்கம் சிறப்புடன் நடைபெற்றிட மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள இடங் களில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை அணிதிரட்டி இந்த மாபெரும்  இயக்கத்தில் பங்கேற்கச் செய்திட சம்பந்தப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். எந்தச் சூழ்நிலையிலும் போக்கு வரத்திற்கு இடையூறாக மனிதச் சங்கிலி அமைந்துவிடாமல் பார்த்துக்கொள்வது நம் அனைவரின் பொறுப்பாகும் என்பதை கவனப்படுத்துகிறோம். மாலை 4.00 மணிக்கு மனிதச் சங்கிலி  துவங்கி சரியாக 5 மணிக்கு முடித்திட  வேண்டும். மனித சங்கிலி முடிந்தவுடன்  அமைதியான முறையில் அனை வரும் கலைந்து செல்ல வேண்டுமென  கட்சிகளின் தலைவர்கள், இயக்கங்களின் தலைவர்கள் விடுத்துள்ள கூட்டறி க்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

;