states

img

தில்லி போராட்டம் குறித்த அவதூறுக்கு பதிலடி கங்கனா ரணாவத்தை காருடன் சிறைப்பிடித்த பஞ்சாப் விவசாயிகள்!

சண்டிகர், டிச.4- பாஜக ஆதரவு பாலிவுட் நடிகை யான கங்கனா ரணாவத்தை, பஞ்சாப் மாநிலத்தில், விவசாயி கள் சிறைப்பிடித்த சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளை கடந்த ஓராண்டாக மிகவும் தரந் தாழ்ந்து கங்கனா ரணாவத் விமர் சித்து வந்தார். ‘’தில்லி எல்லை களில் போராடுவது விவசாயிகள்  அல்ல; அவர்கள் காலிஸ்தான் தீவிர வாதிகள்’’ என்று கூறியதுடன், “விவசாயிகள் பேரணியில் பங் கேற்ற ஒரு வயதான பெண்மணி யை - குடியுரிமைச் சட்டத்திற்கு எதி ரான ஷாகின் பாக் போராட்டங்களி லும் அவரைப் பார்த்திருக்கி றேன்.. நூறு ரூபாய் கிடைக்கும் என்பதற்காக போராட வந்தவர் அவர்’’ என்று கொச்சைப்படுத்தி னார். “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தன் உயிரைப் பணயம் வைத்து அவர்களை (சீக்கியர் களை) கொசுக்களைப் போல் நசுக்கினார். அவர் உயிரிழந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் கூட இன்றும் அவரது பெயரைக் கேட் டால் அவர்கள் (சீக்கியர்கள்) நடுங்குகிறார்கள்.

அவரைப் போன்ற ஒரு நபர்தான் இப்போது தேவை!” என்று கடந்த வாரம் கூட  வன்மத்தை வெளிப்படுத்தி இருந் தார். இந்நிலையில்தான், இமாச்ச லுக்கு சென்றுவிட்டு சத்தீஸ்கர் வழி யாக காரில் பஞ்சாப் மாநிலம் வழி யாக பயணம் செய்த கங்கனா ரணா வத்தை ரூப்நகர் மாவட்டம் கிராத் பூர் சாஹிப் அருகே விவசாயிகள் சிறைப்பிடித்துள்ளனர். தங்களை இழிவுபடுத்தியதற்கு மன்னிப்பு கேட்காமல் கங்கனாவை இடத்தை விட்டு ஒரு அடிகூட அகல விட மாட்டோம் என்று விவசாயிகள் கூறியதால், கங்கனா 1 மணி நேர மாக காருக்குள்ளேயே கிடந்து புழுங்கிப் போனார்.

பின்னர் ‘’விவ சாயிகளை விமர்சிக்கவில்லை; சிஏஏ சட்டத்துக்கு எதிராக போராட் டம் நடத்தியவர்களைத்தான் விமர்சித்தேன்’’ என்று சமாளித்து அங்கிருந்து மீண்டுள்ளார். இதனிடையே “நான் பஞ்சாப் பில் நுழைந்தபோது ஒரு கும்பல் என் கார் மீது தாக்குதல் நடத்தியது. அவர்கள் விவசாயிகள் என்று கூறினார்கள். பாதுகாப்பு இல்லா விட்டால் என்னை அடித்துக் கொன்றிருப்பார்கள். இதுபோன்ற கொலைகார கும்பல் நாட்டில் பய மின்றி நடமாடுவது வெட்கக்கேடா னது.” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் விவசாயி களைச் சீண்டியுள்ளார்.

;