states

முஸ்லிம் பெண்களை மதம் மாற்றும் திட்டம் ‘லவ் ஜிகாத்’திற்கு போட்டியாக ‘லவ்கேசரி’

ராய்ச்சூர், ஏப்.12- இஸ்லாமிய ஆண்கள், இந்துப் பெண்களைத் திட்டமிட்டு காத லித்து திருமணம் செய்வதாகவும், அதன்மூலம் அவர்களை மதம் மாற்றுவதாகவும் ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் கூப்பாடு போட்டு வரு கின்றனர்.  இதனை ‘லவ் ஜிகாத்’ என்று குறிப்பிடும் அவர்கள், கல்வி நிலை யங்களில் ஒன்றாகப் பழகும் இஸ்லாமிய மாணவர்கள் மற்றும் இந்து மாணவியர் மீது வன்முறைத் தாக்குதல்களை நடத்தி வரு கின்றனர். லவ்ஜிகாத்தைத் தடுக்கிறோம் என்று, பாஜக ஆளும் மாநிலங்களில், கடும் தண்டனைகள் வழங்கும் வகையில் சட்டங்க ளைக் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில், ‘லவ்ஜிகாத்’திற்குப் போட்டியாக, முஸ்லிம் பெண்களை இந்து ஆண்கள் திருமணம் செய்வதற்கான ‘லவ்கேசரி’ எனும் பிரச்சாரத்தை தொடங்கப் போவதாக, ‘ஸ்ரீராம் சேனா’ என்ற அமைப்பு மிரட்டியுள்ளது.  கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் நடைபெற்ற ராமநவமி விழா வில் ஸ்ரீராம் சேனா ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரா ராம னகவுடா பேசியுள்ளார்.  அப்போது, “ராய்ச்சூர் மாவட்டத்தில் ‘லவ்  ஜிகாத்’ சம்பவங்கள் நடைபெறக் கூடாது. இனி ‘லவ் கேசரி’ சம்ப வங்கள்தான் நடக்க வேண்டும். நாங்கள் உங்களுடன் இருக்கி றோம். ‘லவ்ஜிகாத்’ முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். இதற்கு ‘லவ்கேசரி’ முக்கியமாகும். இதன்மூலம் இந்து இளைஞர்கள் முஸ்லிம் பெண்களை திருமணம் செய்து அவர்களது மதநம் பிக்கைகளை மாற்றம் செய்ய வேண்டும்” என்று கொக்கரித்துள்ளார்.