புதுச்சேரி, ஜூலை 18- குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி புதுச் சேரி சட்டப்ப்பேரவை யில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையத்தில் முதல்வர் என்.ஆர். ரங்க சாமி, பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் தேனி ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், நமச்சி வாயம், சாய் சரவணன் குமார் உள்ளிட்ட 16 பேரும் வாக்களித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சிவா தலைமையில் திமுக உறுப்பினர்கள் 6 பேர், காங்கிரஸ் உறுப்பி னர்கள் 2 பேர், சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் என மொத்தம் 30 பேர் தங்களது வாக்கை பதிவு செய்தனர். அதேபோல் புதுச்சேரி மக்களவை தொகுதி உறுப்பினர் வெ.வைத்தியலிங்கமும் தனது வாக்கை பதிவு செய்தார். இந்த தேர்தலையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்திற்கு மூன்ற டுக்கு பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.