states

img

சிஏஏ போராட்டத்தில் உயிரிழந்த 22 முஸ்லிம்கள்; 2 ஆண்டாக எப்ஐஆர் இல்லை!

புதுதில்லி, டிச.23- நாடாளுமன்றத்தில் கடந்த 2019 டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (CAA) எதிராக உத்தரப் பிரதேசம், தில்லி, அசாம் என நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. ஆனால், பாஜக ஆட்சியாளர்கள். இந்தப் போராட்டங்களை ஈவிரக்கமன்ற வகையில் கையாண்டனர். குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் சிஏஏ-வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் ஆதித்யநாத் அரசின் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இவற்றில் 22 முஸ்லிம்கள் வரை கொல்லப்பட்டனர். வாரணாசி, ராம்பூர், முசாபர் நகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர், சம்பல் மற்றும் பிஜ்னோரில் தலா இருவர், கான்பூரில் 3 பேர், மீரட்டில் 5 பேர், பெரோஸாபாத்தில் 7 பேர் என்ற எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இறந்ததாக கணக்குகள் வெளியாகின.

இந்த படுகொலைகள் தொடர்பாக, உ.பி. காவல்துறை மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் 22 உயிர்கள் பறிபோய் 2 ஆண்டுகள் கடந்த பின்பும் தற்போதுவரை ஒரு எப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை என்ற உண்மை பாதிக்கப்பட்ட குடும்பங்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரம் சிஏஏ போராட்ட வன்முறைகள் என்ற பெயரில் உ.பி. காவல் நிலையங்களில் மொத்தம் 833 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

;