புதுதில்லி, டிச. 17 - தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான காணொளி வாயிலான ஆலோச னைக் கூட்டத்தில் கலந்து கொள்ளு மாறு, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திராவுக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவு பிறப் பித்த விவகாரம் விவாதங்களை ஏற்ப டுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 15 அன்று, ஒன்றிய அரசின் சட்டத்துறை அமைச்சக செய லாளர், இந்திய தேர்தல் ஆணையத் துக்கு கடிதம் ஒன்றை எழுதியதாக கூறப்படுகிறது. அதில், “மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்த தல் அனைத்துக்கும் பொதுவான வாக்காளர் பட்டியலை உருவாக்கு வது குறித்து பிரதமரின் தலைமைச் செயலாளர், டாக்டர் பி.கே மிஸ்ரா தலைமையில் நவம்பர் 16 அன்று ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில், தலைமை தேர்தல் ஆணையர் கலந்து கொள் ளுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்” என்று அரசு செயலாளர் உத்தர விட்டு இருந்ததாக தெரிகிறது.
இந்திய அரசியலமைப்பு தேர்தல் ஆணையத்துக்கு தன்னாட்சி அதிகா ரத்தை வழங்கியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்களை எந்தவித மான அரசியல் குறுக்கீடுகள் மூலமும் ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்த முடி யாது. அலுவல் சார்ந்த வசதிகளை மட்டுமே, ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் செய்து கொடுக்க முடியும். வேறெந்த வகை யிலும் மூக்கை நுழைக்க முடியாது. அவ்வாறிருக்கையில், தலை மைத் தேர்தல் ஆணையர் உட்பட ஒட்டுமொத்த தேர்தல் ஆணையத்திற் கும் உத்தரவு பிறப்பித்து பிரதமரின் அலுவலகம் கடிதம் எழுதிய விவ காரத்தை ஆங்கில நாளேடான ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு வெளிக் கொண்டு வந்துள்ளது.
அதேநேரம், இந்திய தேர்தல் ஆணையர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்து, இந்திய அரசியலமைப்பு தங்களுக்கு வழங்கி யிருக்கும் சுதந்திரத்தை நிலைநாட்டி விட்டார்கள் என்றும் அந்த ஏடு கூறி யுள்ளது. லட்சுமண ரேகையை மீறாத வகையில், கூட்டத்திற்குப் பிறகு, தேர்தல் ஆணைய அதிகாரிகள் முறைசாரா விதத்தில் பிரதமர் அலு வலக அதிகாரிகளுடன் கலந்துரை யாடியதாகவும் (informal talks) தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஒன்றிய அரசின் இந்த செயல் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக் கிறது. “தேர்தல் ஆணையம் சுதந்திர மாக இருக்க வேண்டும். அது ஒரு சுதந்திரமான அமைப்பு. அவ்வாறி ருக்கையில், பிரதமர் அலுவலகம் எவ்வாறு தேர்தல் ஆணையத்தை அழைக்க முடியும்? அப்படியானால், தேர்தல் பாரபட்சமின்றி நடக்கும் என்பதற்கு என்ன உத்தர வாதம் உள்ளது?
ஐந்து மாநில தேர்தல் உட்பட வரவிருக்கும் அனைத்து தேர்தல்களிலும் நமக்கு நீதி கிடைக்கும் என்று எப்படி எதிர் பார்க்க முடியும்?” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். “இந்த அரசாங்கம் ஒவ்வொரு அமைப்பின் சுதந்திரத்தையும் அழித்து வருகிறது. ஏற்கெனவே அவர்கள் சிபிஐ, சிவிசி-யை, இ.டி. ஆகியவற்றை அழித்துவிட்டார்கள். இதுபோன்ற விஷயங்கள் வேறு எந்த நாட்டிலும் நடக்காது” என்றும் அவர் கூறியுள்ளார். “தேர்தல் ஆணையம் போன்ற சுதந்திரமான அமைப்புகளை, ஒன்றிய பாஜக அரசாங்கம் எவ்வாறு தன் கைப்பாவை ஆக்கப் பார்க்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் விமர்சித்துள்ளார்.
“இதற்கு முன்பும் தேர்தல் ஆணை யத்தின் சுதந்திரம் சமரசம் செய்யப் பட்டு அரசாங்கம் தேர்தல் ஆணை யத்தை சீர்குலைத்த நிகழ்வுகளை நாம் கண்டிருக்கிறோம். எனினும், தேர்தல் ஆணையத்திற்கு உத்தர விடுவது, இதற்கு முன்பு இந்திய வர லாற்றில் கேள்விப்படாத ஒன்று” என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் அதிர்ச்சிய ளிக்கிறது என்றாலும், “இனி ஆச்சரி யப்படுவதற்கில்லை” என்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் எம்.பி. மனோஜ் ஜா சாடியுள்ளார். “தலைமைத் தேர்தல் ஆணை யரை பிரதமர் அலுவலகம் அழைத் திருப்பது, தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை அழிப்ப தாகும் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஜவஹர் சர்கார் குற்றம் சாட்டி யுள்ளார்.