புதுதில்லி, ஆக. 10 - நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தை ஒளிபரப்பு வதில் ‘சன்சத் டி.வி.’ எனப்படும் மாநி லங்களவை தொலைக்காட்சி பார பட்சத்துடன் நடந்து கொள்வதாக முதல் நாளே குற்றச்சாட்டுஉள்ளது. அமைச்சர்கள், ஆளும்கட்சி எம்.பி.க்கள் பேசும்போது அவர்களை முழுமையாகக் காட்டும் கேமிரா, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசு ம்போது, அவர்களைக் காட்டாமல் சபாநாயகரை காட்டும் வகையில் அமைக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், புதன்கிழமை யன்றும் இந்த இருட்டடிப்பு வேலை யை சன்சத் டி.வி. தொடர்ந்ததாக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சி கள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பாஜக-வினர் பேசும் போது அவரையே காண்பித்து வந்த மாநி லங்களவை தொலைக்காட்சி, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் பேசும் போது அவர்களைச் சரியாக காண்பிக்கவில்லை. மேலும் பல நிமிடங்கள் சபாநாயகரையே காண்பித்து வந்த நிலையில், கனி மொழி பேசும்போதும் அவரை முழு மையாகக் காண்பிக்கவில்லை என இந்தியா (I.N.D.I.A) கூட்டணி கட்சி எம்.பி.க்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக அப்போதே கதிர் ஆனந்த், தமிழச்சி தங்க பாண்டியன் உள்ளிட்ட எம்பிக்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்னரும் அதே நிலைமை தொடர்ந்ததால் மீண்டும் மற்ற எம்.பி.க்கள் குரல் எழுப்பினர்.
அவர்களைத் தடுத்த கனிமொழி எம்.பி., “பாஜக-வினருக்கு நம்மீது பயம், நமது முகத்தைப் பார்க்க பயமாக இருக்கிறது போல நாம் பேசுவதையாவது அவர்கள் கேட்கட்டும்” என்றார். மேலும் மணிப்பூர் மக்கள் பேசுவதை தான் அவர்கள் கேட்கவில்லை நாம் பேசுவதையாவது கேட்கட்டும் என்று தெரிவித்தார். அதன்பிறகும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் காட்சிகள் ஒளிபரப்பாகாத நிலை யில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடு மையான எதிர்ப்பு தெரிவித்தனர். தேசிய மாநாட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பரூக் அப்துல்லாவின் உரையின் போதும், சபாநாயகர் நாற்காலியில் இருந்த ரமா தேவியின் மீதே கேமிராக்கள் குவிந்தன. இந்நிலையில், மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி புதன்கிழமை ஆற்றிய உரையில் 40 சதவிகிதம் மட்டுமே சன்சத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது என்று காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப் பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறு கையில், ‘மக்களவையில் ராகுல் காந்தி 37 நிமிடங்கள் பேசினார். ஆனால், 17 நிமிடங்கள் 37 விநாடி கள் மட்டுமே அவருடைய பேச்சு ‘சன்சத் தொலைக்காட்சி’யில் ஒளி பரப்பப்பட்டது. மேலும், மணிப்பூர் விவகாரம் குறித்து அவர் பேசும் ம்போது, சன்சத் தொலைக்காட்சி கேமிரா ராகுல் காந்தியை காண்பிக்காமல், 71 சதவிகித நேரம் அவைத் தலைவரையே காண்பித்து க்கொண்டிருந்தது. ராகுல் மீதான பிரதமர் மோடியின் அச்சத்தையே இது வெளிப்படுத்துகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.