நிமெசலைட் மருந்து மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை
இந்தியாவில் தீவிர காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு நிமெசலைட் மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. வலி நிவாரணியாக செயல்பட்டாலும் இந்த மருந்தால் அதிக பக்கவிளைவுகள் உள்ளதாக கூறப்படு கிறது. குறிப்பாக தலைவலி, வயிற்றுப் போக்கு, பார்வை குறைபாடு, கல்லீரல் பாதிப்பு ஆகிய விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நிமெசலைட் மருந்தை மனித பயன்பாடு மற்றும் கால்நடை களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கில் நாடு முழுவதும் நிமெசலைட் மருந்துக்கு தடை விதிக்கப் பட்டது. இதனையடுத்து அனைத்து மாநி லங்களுக்கும் அதன் உற்பத்தி மற்றும் விற்பனை சட்டவிரோதமாக நிகழாத வகையில், கண்காணிப்பு நடவடிக்கை களையும் தடுப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
ஷிண்டேவிற்கு மிரட்டல்: 2 பேர் கைது
மகாராஷ்டிரா துணை முதலமை ச்சரும், சிவசேனா தலைவரு மான ஏக்நாத் ஷிண்டேவிற்கு வியாழக் கிழமை அன்று இரவு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது. மும்பை காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் புல்தா னாவைச் சேர்ந்த 2 பேர் தான் மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது என தெரிய வந்த நிலையில், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.