states

img

மோசடி பேர்வழிகள் எல்லாம் பாஜகவில்தான் உள்ளனர் - ஊழல்களின் ஒருங்கிணைப்பாளர் மோடி

லாலு பிரசாத் தாக்கு

புதுதில்லி, ஜூலை 7 - ஊழல் பேர்வழிகளைப் பாஜக- வில் சேர்த்துக் கொண்டு, பிரதமர்  நரேந்திர மோடி, நாட்டின் ஒட்டு மொத்த ஊழல் ஒருங்கிணைப்பாள ராக மாறியிருப்பதாக பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய  ஜனதாதளம் கட்சியின் தலைவரு மான லாலு பிரசாத் சாடியுள்ளார். மருத்துவப் பரிசோதனை களுக்காக புதுதில்லி புறப்பட்ட லாலு பிரசாத், முதலில் பாட்னா விலும், பின்னர் தில்லியிலும் செய்தி யாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசியுள்ளார்.  அப்போது, மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசாங்கத்தில் அஜித் பவார்  இணைந்திருப்பது பற்றி செய்தி யாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, “பிரதமர் மோடி ஊழல்களின் ஒருங்கிணைப்பாளராகி இருக்கிறார்; முன்பு யாரை ஊழல்வாதி என்று அவர் கூறி னாரோ, இன்று அதே நபரை அமைச்சராக்கி இருக்கிறார்;

செய்தியாளர்கள் இதைப் பார்க்க வில்லையா, என்ன?” என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல தில்லி செல்வதற்கான நோக்கம் என்ன?  என்ற கேள்விக்கு, 2024 மக்கள வைத் தேர்தலில் ஒன்றிய ஆட்சியதி காரத்திலிருந்து மோடி அரசை அகற்றுவதற்கான களத்தைத் தயார்படுத்தப் போகிறேன் என்று  தெரிவித்துள்ளார். “ரத்த பரி சோதனை உள்ளிட்ட வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக தில்லி செல்கிறேன். அதன் பிறகு மீண்டும் பாட்னாவுக்கு வருவேன். அதன் பிறகு பெங்களூருவில் நடை பெறவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு செல்வேன், 2024 மக்களவைத் தேர்தலில் ஒன்றிய ஆட்சியதிகாரத்திலிருந்து மோடி அரசை அகற்றுவதற்கான களத்தை  தயார்படுத்தவும் போகிறேன்” என்று  அவர் உற்சாகமாக குறிப்பிட்டுள் ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஓய்வெடுக்க வேண்டும் என்று அஜித் பவார்  கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு,  “அஜித் பவார் சொல்வதால் மட்டும் சரத் பவார் ஓய்வு பெறுவாரா? ஒரு மூத்த தலைவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டுமா? அரசியலில் ஓய்வே இல்லை” என்று லாலு பதிலளித்துள்ளார். திருமணம் செய்து கொள்ளு மாறு, ராகுல் காந்திக்கு நீங்கள் கூறிய அறிவுரைக்கும், அவர் பிரதமர் வேட்பாளராக இருப்ப தற்கும் எந்த வகையிலேனும் தொடர்பு உள்ளதா? என்ற  கேள்விக்கும் லாலு பதிலளித்துள் ளார். அதில், “இரண்டும் தனித்தனி விஷயங்கள்” என்று கூறியிருக்கும் லாலு பிரசாத், “ஆனால், எவர் பிரதமரானாலும் மனைவி இல்லாமல் இருக்கக் கூடாது. மனைவி இல்லாமல் பிரதமர் இல்லத்தில் தங்குவது தவறு. இதை ஒழிக்க வேண்டும்” என்றும், மோடி பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதை நகைச்சுவையாக குறிப் பிட்டுள்ளார்.

;