states

விரதம் இருப்பவர்களுக்காக மோடி அரசு ஏற்பாடாம் நவராத்திரியை முன்னிட்டு ரயில்களில் வெங்காயம், பூண்டு இல்லாத உணவு!

புதுதில்லி, செப்.29- நவராத்திரியை முன்னிட்டு, செப்டம்பர் 26 முதல்  அக்டோபர் 5 வரை ரயிலில் பயணம் மேற்கொள்  வோருக்கு சிறப்பு விரத உணவுக்கு மோடி அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவில் கொண்டாடப்படும் இந்து மத முக்கியப் பண்டிகையான நவராத்திரி, செப்டம்பர் 26 துவங்கி யது. இது அக்டோபர் 5 வரை நடை பெறுகிறது. இதில், நவராத்திரி விர தம் முக்கியமான ஒன்றாகும். குறிப்  பாக வடமாநிலங்களில் இந்த விர தம் பிரபலம். இந்நிலையில், நவராத்திரி விர தம் இருப்பவர்களுக்காக, இந்திய  ரயில்வேயின் உணவு மற்றும் சுற்று லாக் கழகம் (Indian Railway Catering and Tourism Corporation - IRCTC)  புதிய மெனுவை நிர்வாகம் அறிவித்  துள்ளது. இதுதொடர்பாக இந்திய ரயில்வே தனது டுவிட்டர் பக்கத்தில்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள் ளது. அதில், “மங்களகரமான நவ ராத்திரி திருவிழாவின் போது, இந்தி யன் ரயில்வே உங்கள் விரதத்தைக் கடைப்பிடிக்க உதவும் விதமாக 26.9.22 முதல் 05.10.22 வரை சிறப்பு மெனுவை உங்களுக்கு வழங்குகி றது. உங்களின் ரயில் பயணத்திற் கான நவராத்திரி உணவு வகை களை ‘Food on Track’ செயலியில் இருந்து ஆர்டர் செய்யவும், http:// ecatering.irctc.co.in ஐப் பார்வை யிடவும் அல்லது 1323 என்ற எண்ணில் அழைக்கவும்” என டுவீட் செய்துள் ளது.

இந்து உப்பில் சமைக்கப்படும் உணவு

நவராத்திரி ஸ்பெஷல் விரத சாப்  பாட்டு மெனுவில் ஆலு சாப், ஐவ்வ ரிசி கட்லெட், சபுதானா டிக்கி சபு தானா கிச்சடி, கோஃப்தா கறி மற்றும் பனீர் மக்மாலி, பராத்தாக்கள், ஜவ்வ ரிசி டிக்கி, ஐவ்வரி கிச்சடி, அடை பாயாசம் உள்ளிட்டவை அடங்கும். விரதம் இருக்கும் பக்தர்களுக்கு சாதாரண உப்பிற்கு பதிலாக இந்து உப்பில் செய்த உணவு கொடுக்கப் படும், அத்துடன் வெங்காயம் மற்றும்  பூண்டு இல்லாத சுத்தமான விரத சாப்பாடு வேண்டும் என்றாலும் அது வும் கிடைக்கும். இ-கேட்டரிங் வசதிகளை வழங் கும் IRCTC ரயில்களில் மட்டுமே வழங்  கப்பட்டு வரும் இந்த சிறப்புத் தாளி யின் ஆரம்ப விலை ரூ.99 ஆகும்.  முதற்கட்டமாக கிழக்கு ரயில்வே பகு திகளில் உள்ள 400 ரயில்வே நிலை யங்களைக் கடக்கும் ரயில்வே பய ணிகளுக்கு இந்த மெனுக்களை ரயில்வேயில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்  தாலே போதும், பயணி இருக்கக் கூடிய ரயில் பெட்டி தேடி சிறப்பு உணவு வந்துவிடும் என்று கூறப்பட்  டுள்ளது.