புதுதில்லி, அக்.8- பொதுத்துறை வங்கியான ஐடி பிஐ-வங்கியை சூறையாடும் நட வடிக்கையை மோடி அரசு தொடங்கி விட்டது. கிட்டத்தட்ட 60.72 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்துள ளது. இதைத் தொடர்ந்து ஐந்து பொதுத் துறை நிறுவனங்களை விற்கவும் ஒன் றிய அரசு தயாராகிவிட்டது. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி), ஒன்றிய அரசு ஆகியவற்றின் சார்பில் ஐடிபிஐ வங்கியில் உள்ள 60.72 சதவீதப் பங்குகளை விற்க முடிவு செய் துள்ளன. ஜூன் 30-ஆம் தேதி நிலவரப் படி, ஐடிபிஐ வங்கியில் எல்ஐசியும் ஒன்றிய அரசும் 94 சதவீத பங்குகளை வைத்துள்ளன. அதில் ஒன்றிய அரசின் பங்கு 45.48 சதவீதமும் எல்ஐசி-யின் பங்கு 49.24 சதவீதமாகவும் உள்ளது. இந்த நிலையில் ஒன்றிய அரசு 30.48 சத வீத பங்குகளை விலக்கிக்கொள்கி றது. அதாவது தனியாருக்கு தாரை வார்க்கிறது. அத்துடன் எல்ஐசியின் 30.24 சதவீத பங்குகளையும் சூறை யாட முடிவு செய்துவிட்டது மோடி அரசு. இந்தியாவில் பொதுத்துறை வங்கியை தனியார்மயமாக்கும் முதல் முயற்சி இதுவாகும். இது குறித்து முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “முதலீட்டை விலக்குதல் என்பது அர சாங்கத்திற்குச் சொந்தமான சொத்துக் களை கலைத்தல் அல்லது விற்பனை செய்வதாகும்”. எனத் தெரிவித்துள் ளது.
கடந்த ஆண்டே, ஐடிபிஐ வங்கி யின் பங்குகளை விற்க ஒன்றிய அரசு யோசித்து வருகிறது எனக் கூறியிருந் தது குறிப்பிடத்தக்கது. ஐடிபிஐ வங்கியின் கடன் அளவு மோசமானதால் கடந்த 2017-ஆம் ஆண்டு மே முதல் 2021 மார்ச் வரை ரிசர்வ் வங்கியின் பிசிஏ எனும் உடனடி திருத்த நடவடிக்கை கட்டமைப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்தது. நிலைமை சீராகி அதிலிருந்து ஐடிபிஐ வெளி யேறிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு பொருளாதார விவகாரங்க ளுக்கான அமைச்சரவைக் குழு வங்கி யிலுள்ள பங்குகளை விற்கவும், நிர்வா கக் கட்டுப்பாட்டை மாற்றுவதற்கும் ஒப்புதல் வழங்கியது. அந்த நடவ டிக்கைகளை தற்போது தொடங்கி விட்டது. ஐடிபிஐ வங்கி விற்பனை இந்த நிதி யாண்டில் நிறைவு பெற்றால், இந்த நிதியாண்டில் ஒன்றிய அரசு தனது பங்குகள் விற்பனை மூலம் திரட்ட உள்ள ரூ.65,000 கோடிக்கு பங்களிப்பு செய்யும். அரசு ஏற்கனவே ரூ.24,544 கோடி திரட்டியுள்ளது. அதில் பெரும் பகுதி எல்.ஐ.சி.,யில் இருந்த பங்கு களை விற்றதன் மூலம் கிடைத்ததா கும். ஐடிபிஐ வங்கியை விற்பதோடு ஓன்றிய அரசு நிற்கப்போவதில்லை. அவர்களது அடுத்த இலக்கு பெங்க ளூருவில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML), கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமி டெட், விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளாண்ட், சத்தீஷ்கர் மாநிலத்திலுள்ள நாகர்னார் ஸ்டீல் பிளாண்ட் மற்றும் திருவனந்தபுரத்திலுள்ள எச்எல்எல் லைப்கேர் போன்ற பல நிறுவனங் களை சூறையாடுவதற்கு ஒன்றிய அரசு இலக்கு வைத்துள்ளது. நிறுவனங்களை தனியார்மய மாக்குவதை வலியுறுத்தும் ஒன்றிய அரசு முதலீட்டு வாய்ப்புகளை ஆராயு மாறு தனியார் துறையை கேட்டுக் கொண்டுள்ளது. நிதி நிர்வாகத்தை விட பங்கு விலக்கலை சீர்திருத்தமாக பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.