யாரெல்லாம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை விரும்ப வில்லையோ அவர்கள் குழப்பம் ஏற்படுத்துவதை யும், பின்னால் இருந்து பேசுவதையும் செய்வ தற்குப் பதிலாக தங்களின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று சிவசேனா-வின் ‘சாம்னா’ நாளிதழில் அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி மீண்டும் வலுவடைந்து வரும் நிலையில் மம்தா பானர்ஜி, அதன் தலைமை யை ஒப்புக்கொண்டு பாஜக-வுக்கு முடிவு கட்ட தயாராக உள்ளாரா அல்லது பாஜகவுக்குத் தனது பிடிவாதம் மூலம் மீண்டும் வாய்ப்பு அளிக்கப் போகிறாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.