states

‘கிங்கர்தவ்யவிமுத் மட்’ என்ற பெயரை பிரதமர் இல்லத்திற்கு சூட்டலாம்...

புதுதில்லி, செப்.7- ராஜபாதையின் பெயரை ‘கர்த்தவ்ய பாத்’ என மாற்றும் மோடி அரசின் முடிவு குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பல ரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெய்வீர் ஷெர்கில், “’ராஜ்பாத்’தை ‘கர்த்தவ்ய பாத்’ (கடமைப் பாதை) என மாற்றியது சிறந்த முடிவுதான். இது உங்கள் (பாஜக-வினர்) அனைவருக்குமே, மக்கள் சேவை என்பது ஆட்சி உரிமை அல்ல, கடமையை ஆற்றுவதே என்பதை புரியவைக்கும்’’ என மறைமுக விமர்சனம் வைத்திருந்தார். இந்நிலையில், ‘ராஜபாதை’யின் பெயர் ‘கர்த்தவ்ய பாத்’ என்று பெயர் மாற்றப் பட்டது போல, புதிதாக கட்டப்படும் பிரதமர்  இல்லத்துக்கு ‘’கிங்கர்தவ்யவிமுத் மட்’ என பெயரிடலாம் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ராவும் காட்டமாக குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு கருத்துப்  பதிவுகளை மஹூவா மொய்த்ரா வெளி யிட்டுள்ளார். அதில், “இங்கே என்ன நடக்கிறது? நமது  கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை மாற்று வதையே பாஜக தனது ஒரே கடமையாகக் கொண்டிருக்கிறது. வரலாற்றை மாற்றி, அதி காரத்தைத் திணிக்கும் பித்து நிலையில் பாஜக உள்ளது. தில்லி ராஜபாதையை, கடமைப் பாதையாக மாற்றியுள்ளதாக அறி கிறேன். அதேபோல பிரதமரின் புதிய  அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு ‘கிங்கர்தவ்ய விமுத் மட்’ என பெயரிடுவார்கள் என்று நினைக்கிறேன்’’ என்று மஹூவா மொய்த்ரா குறிப்பிட்டுள்ளார். ‘கிங்கர்தவ்யவிமுத் மட்’ என்பதற்குத் தமிழில் ‘குழப்பமான மடம்’ என்று பொருளாகும்.

;