உ.பி. தேர்தலின் நான் காம் கட்டமாக, ரேப ரேலி, லக்கிம்பூர் கெரி, உன்னாவ், லக்னோ உள்ளிட்ட மாவட்டங்க ளில் உள்ள 59 தொகுதி களுக்கு புதனன்று வாக்குப்பதிவு நடை பெற்றது. இதில், அதிகபட்சமாக, பாஜக அமைச்சரின் மகன் விவசாயிகளைக் கார் ஏற்றிக் கொன்ற லக்கிம்பூர் கெரியில் 62.42 சதவிகித வாக்குகள் பதிவாகி யுள்ளன. வாக்களித்துவிட்டு வெளியில் வந்த அஜய் மிஸ்ராவிடம் கேள்விகள் எழுப்ப பத்திரிகையாளர்கள் குவிந்தி ருந்த நிலையில் அவர், எந்தக் கேள்வி யையும் எதிர்கொள்ளாமல் வெறும் வெற்றி அடையாளத்தை விரல்களில் காட்டிவிட்டு ஓட்டம் பிடித்துள்ளார்.