states

img

கொந்தளித்தது இந்தியா!

மணிப்பூர் பழங்குடிப் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட கொடூரத்தைக் கண்டித்து தில்லியில் வியாழனன்று மணிப்பூர் பவன் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலைமையில் மகளிர் அமைப்புகள் ஆவேசமிக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாதர் சங்க பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே உள்ளிட்டோர் முழக்கமிட்டனர்.

இம்பால், ஜூலை 20 - மணிப்பூரில் குக்கி - ஜோ பழங்குடி வகுப்பைச் சேர்ந்த 2 பெண்கள், நூற்றுக்கணக்கான மெய்டெய் வகுப்பைச் சேர்ந்த ஆண்களால் தெருக்களில் நிர்வாண மாக இழுத்துச் செல்லப்பட்டும், அந்தரங்க உறுப்புகளைத் தொட்டு பாலியல் அத்துமீறலுக்கும், கும்பல் வல்லுறவுக்கும் உள்ளாக்கப் பட்டுள்ளனர்.  இதுதொடர்பாக சமூக வலை தளங்களில் வெளியாகி இருக்கும் வீடியோக்கள், காண்போரை பதை பதைப்புக்கும், அதிர்ச்சிக்கும், தலை குனிவுக்கும் உள்ளாக்கி இருக்கின்றன. கடந்த மே 4 அன்று மனித இனத் தையே வெட்கித் தலைகுனிய வைக்கும் இந்த சம்பவம் நடந்துள்ளது.  மெய்டெய் சமூகத்தைச் சேர்ந்த  நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சிலர், குக்கி பழங்குடியின சமூ கத்தைச் சேர்ந்த இரண்டு பெண் களை நிர்வாணமாக்கி இழுத்துச் செல்வதும், அந்தப்பெண்களின் அந்தரங்க உறுப்புகளைத் தொட்டு அத்துமீறுவதும், சமூகவலை தளங்களில் வெளியான வீடியோக் கள் மூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. பின்னர் அந்தப் பெண் களை கும்பலாக பாலியல் வல்லுறவு செய்ததாக கூறப்படுகிறது. மே 4 அன்று மணிப்பூரின் பிபை னோம் கிராமத்தில்தான் இந்தச் சம்ப வம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

பிபைனோம் கிராமத்தில் உள்ள வீடுகளை எரித்த மெய்டெய் கும்பல் அதிலிருந்து தப்பியோடிய 2 ஆண்கள், 3 பெண்கள் என ஐந்து பேரை தாக்கி உள்ளனர். இதில் ஒரு ஆண் இறந்த நிலையில் 2 பெண் களை நிர்வாணப்படுத்தி அவர் களை ஊர்வலமாக  இழுத்துச் சென்று ள்ளனர். கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.  இந்தக் குற்றச்செயலில் சுமார் 800 முதல் 1,000 பேர்  ஈடுபட்டிருப்ப தாகக் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. சம்பவம் தொடர் பாகக் கிடைத்த தகவலின் அடிப்படை யில் காவல்துறையினர் ஜீரோ எப்.ஐ. ஆரை உடனடியாகப் பதிவு செய்திருக்கின்றனர். பின்னர், சம்ப வம் நடந்த காவல் எல்லைக்குட்பட்ட நோங்போக் செக்மாய் காவல்நிலை யத்திற்கு வழக்குமாற்றப்பட்டு, குற்றவாளிகளுக்கு எதிராக கடத்தல், கும்பல் வல்லுறவு, கொலை உள்ளி ட்ட பிரிவுகளில் மே 18 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மணிப்பூர் மாநிலத் தலைநகரான இம்பாலில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில்தான் இந்த கொடிய சம்பவம் நடந்துள்ளது எனக் கூறும் பழங்குடித் தலைவர்கள் மன்றம் (ITLF), இந்தத் துயரச் சம்பவம் குறித்து, நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையத்திடமும் மற்றும் தேசிய பட்டியல் பழங்குடியினர் ஆணையத்திடமும் முறையிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!
மாதர், மாணவர், வாலிபர், மலைவாழ் மக்கள் இயக்கங்கள் அறிவிப்பு

மணிப்பூர் பழங்குடி பெண்களுக்கு எதிரான இந்த கொடூரமான வன்முறைச் சம்பவத்திற்கு கண்டனம் குரல் எழுப்பவும், மணிப்பூர் கலவரத்திற்கு காரணமான பாஜகவின் மணிப்பூர் மற்றும் ஒன்றிய அரசுகளைக்  கண்டித்தும், ஜூலை 22 சனிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் தமிழ்நாடு மாநிலக்குழுக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தில் ஜனநாயக சிந்தனை கொண்ட அனைத்துப் பகுதி மக்களும் பங்கேற்க வேண்டுமென அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.